Header Ads



இந்தப் படத்தை பாருங்கள்


(James Webb) ஜேம்ஸ் வெப் எனப்படும்  தனிச் சிறப்பான, பால்வெளி ஆய்வுக்கான தொலைநோக்கி மூலம் நமக்கு காட்டப்படும்  வண்ணமயமான வானவியல் காட்சிகள், அல்லது நாம் அண்ணாந்து பார்க்கும் வானத்தில் நமக்கு தென்படும் விண்மீன் திரள்கள், கிரகங்கள் எதுவுமே இப்போது இருக்கும் கட்சிகளல்ல.


பல பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த காலத்தில் இருந்து இல்லாமல்போன, அல்லது நகர்ந்த காட்சிகள்தாம் நமக்கு இப்போது தென்படுகின்றன.  


புரியும் படி சொல்வதாயின் மண்ணிலிருந்து விண்ணை நாம் பார்க்கும் போது கடந்தகால அதுவும் பல கோடி ஆண்டுகள் சென்ற, கடந்த காலத்தைத்தான் நமக்கு பார்க்க முடியும். நிகழ்கால, எதிர்கால காட்சிகளை ஒருபோதும் நம்மால் பார்க்க முடியாது. இதற்கான காரணம், மண்ணுலக நேர காலங்கள், கணிப்புக்கள் வேறு, விண்ணுலக ( spacetime)விண்வெளி நேரம் வேறு என்பதாகும். 


இங்குதான் ஒளியாண்டு பற்றிய அறிவு நமக்கு தேவைப்படுகிறது. ஒளியாண்டின் வேகம் வினாடிக்கு 300 ஆயிரம் கிமீ ஆகும்.


சந்திர ஒளி நம்மை ஓரிரு வினாடியில் வந்தடைகிறது, அது நம் பூமிக்கு அருகாமையில் இருப்பதால். 


சூரிய ஒளி சராசரியாக 8 நிமிடங்களில் நம்மை வந்தடைகிறது, அது இன்னும் சற்று தொலைவில் இருப்பதால்.


குறிப்பிட்ட இந்த தொலைவில்  சூரியனும் சந்திரனும் இருப்பதால்தான் அவிரண்டின் அசல் இருப்பிடத்தை நம்மால் காணமுடிகிறது. 


ஆனால் சூரிய குடும்பத்தை தாண்டிய பிரமாண்டமான பால்வெளியில் நாம் காணும் தொலைதூர நட்சத்திரங்கள் யாவும்,அவற்றிலிருந்து வெளிப்பட்ட ஒளியைத்தான் நாம்  காண்கிறோம். அல்லது பல பில்லியன் கணக்கான ஒளியாண்களுக்கு முன்னர் அவைகள் இருந்த இடங்கள் எனலாம். 


வியக்க வைக்கும் பிரபஞ்சத்தின் முன்னால் மனிட சக்கதிகள் யாவும் மண்டியிடாமல் இருக்கவே முடியாது. பரந்து விரிந்த விண்ணுலகோடு பார்க்கும் போது மண்ணுலகில் நாமெல்லாம் எட்டிக் கூட பார்க்கமுடியாத கிணற்றுத் தவழைகள்தான். 


இந்தப்படத்தை பாருங்கள்! அதில் மின்னும் ஒவ்வொரு புள்ளியும் பல மில்லியன் கணக்கான நட்சத்திர திரள்களைக் கொண்ட குவியல்கள். இக்காட்சி கூட பால்வெளியோடு பார்க்கும் போது பாலைவனதில் ஒரு கைப்பிடி மணல் போன்றது! என்கின்றனர், நாஸா விஞ்ஞானிகள். 


இந்த வான்மறை வசனத்தை பாருங்கள்!


((விண்ணிலும் மண்ணிலும் என்னவெல்லாம் உள்ளன என்று ஆய்வுசெய்து பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; எனினும் விசுவாசம் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா.))


📖 அல்குர்ஆன் : 10:101


((நம்முடைய அத்தாட்சிகளை கீழ்வானமெங்கும் அவர்களுக்கு நாம் காட்டுவோம்!))


📖 அல்குர்ஆன் : 41:53


நில்லுங்கள்!

இது வெறுமனே முதல் வானம் என்றால் மேலுலகத்தில் அந்த ரஹ்மான் இது போன்று அடுக்கடுக்காக படைத்து வைத்துள்ள ஏழு வானங்களினதும் பிரமாண்டம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!


அந்த அல்லாஹ்வின் (குர்சி) என்ற பிரமாண்டமான அந்த அண்டத்தில் இருந்து இந்த ஏழு வானங்களையும் பார்த்தால் பிரமாண்டமான பாலைவனத்தில் ஏழு நாணயங்கள் சிதறிக்கிடப்பது போன்று சின்னஞ்சிறியதாக தென்படும் என்று இஸ்லாம் கூறுகிறது. 


அந்த ரஹ்மானின் மகத்தான (அர்ஷ்) என்னும் அரியாசனத்திலிருந்து இந்த (குர்ஷி) என்ற  அண்டத்தை பார்க்கும் போது ஒரு பிரமாண்டமான பாலைவனத்தில் ஒரு யுத்த கவசம் வீசிக்கிடப்பது போல் சின்னஞ்சிறியதாக தோன்றும் என்று இஸ்லாம் கூறுகிறது. 


அகிலங்களின் நாயகன், அண்டங்களின் அரசன் பேராற்றல் மிக்க அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:


(( நிச்சயமாக வானங்கள், பூமியின் உருவாக்கமானது, மனிதர்களின் உருவாக்த்தை விட மிகவும் பெரிதாகும். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.


📖 அல்குர்ஆன் : 40:57


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.