ஆசிரியர் செய்த காரியம் - பாடசாலை செல்ல முடியாது என மாணவர்கள் அழுகை
தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர், முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்து, மாணவர்களுக்கு முடியை வெட்டியுள்ளார். முறையாக வெட்டாமல் தலைமுடியை குதறிவிட்டார்.
இந்த சம்பவம் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்திலேயே இடம்பெற்றுள்ளது.
மாணவர்களின் தலை அலங்கோலமாயுள்ளது. இதனால் மாணவர்கள் இனி பாடசாலை செல்ல முடியாது என அழுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். TM
Post a Comment