Header Ads



எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால்..?


எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், 24 மணித்தியாலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி, ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


கம்பஹாவில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


நல்லாட்சி அரசாங்கத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்சவை பார்த்து  'திருடன்' என கூறினார். ரணிலை,  ராஜபக்சவினர் 'திருடன்' என்றனர். இந்த திருடர்கள் ஒன்றிணைந்து இப்போது அரசாங்கத்தில் உள்ளனர்.


ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பேசப்படுகிறது. 10 தேங்காய்களை திருடியவர் இரண்டு வருடங்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்றால் கோடிக்கணக்கிலும், பில்லியன்கணக்கிலும் திருடியவர்களை குறைந்தது ஒரு வருட காலமேனும் சிறைக்கு அனுப்ப வேண்டும்.


நாட்டில் உள்ள சட்டங்களில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. புதிதாக சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது.


எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், 24 மணித்தியாலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி, ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

1 comment:

  1. ​ஜேவிபியின் சத்தமும் சரத் பொன்சேகாவின் சத்தமும் ஒன்றுதான். அவை ஒருபோதும் செயல்படுத்துவது சாத்தியமற்றவை. ஆட்சிக்கு வரக்கூடிய நபர் அல்லது அவருடைய கட்சி தோல்வியடைந்த கட்சியைச் சேர்ந்த நபர்களை ஒருபோதும் தண்டிப்பது இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.