டென்மார்க் பெண், மாவனெல்லை அலகல்ல பாறையின் அடிவாரத்தில் சடலமாக மீட்பு
ஜூலை 10ஆம் திகதி முதல் காணாமல் போன டென்மார்க் பெண்ணொருவரின் சடலம் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலகல்ல பாறையின் அடிவாரத்தில் இருந்து இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மலையேற போவதாக தெரிவித்துவிட்டு ஹோட்டலில் இருந்து வெளியேறிய பெண், மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பாமையை அடுத்து, ஹோட்டலின் உரிமையாளர் கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, பாறைக்கு அடியில் இருந்து சடலமாக அப்பெண் மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த கடுகண்ணாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.
Post a Comment