Header Ads



பிரதமரின் கடுமையான எச்சரிக்கை


சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு - தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு, எனினும் அதனை வழங்குவதா இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசாங்கமும் மட்டுமே முடிவு செய்யும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 


எனவே இது தொடர்பில் வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். 


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுந்தமானமாக நிராகரித்து விட முடியாது.


அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அந்தத் தீர்வை வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் நாடாளுமன்றமும் - அரசாங்கமுமே முடிவு செய்ய முடியும்.


எனவே அதிகாரப் பகிர்வு தொடர்பில் விமர்சனக் கருத்துகளை முன்வைத்து நாட்டில் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம் என்று சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 


இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமஷ்டி அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தரப்புகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன.


இந்தநிலையில், "தமிழர்கள் கோரும் சமஷ்டியை ஒருபோதும் அரசாங்கம் வழங்காது. அதனைக் கோருவது பயனற்றது" என்று அரச தரப்பு ஆளும் கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  twin

1 comment:

  1. அனைத்து மக்களும் வாழும் பல்லின நாட்டில் சிறுபான்மை மக்கள் கேட்கும் இந்த கோரிக்கை நியாயமானதா என்பதை நிதானமாகவும் நடுநிலைமையாகவும் சிந்திக்கும் ஆட்சியாளர்கள் இலங்கையில் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆட்சியில் அமர்ந்திருக்கும் கைபொம்மைகள் பேசும் பேச்சுக்களைப் பார்க்கும் போது நாட்டில் துவேசத்தையும் இனவாதத்தையும் நன்றாக வளர்த்து அதில் குளிர்காய திட்டமிடும் வீணாப் போன கூட்டங்கள் அவை என்பது தௌிவாகிறது. இப்படியே போனால் இந்த நாட்டு வளரும் தலைமுறையினரின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.