Header Ads



இலங்கை சார்பில் வெற்றி



பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற Mrs Earth 2023 சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

 
சஷ்மி திசாநாயக்கா Mrs Earth சர்வதேச பட்டத்தை வென்றதுடன், Mrs Earth Best in Catwalk, Mrs Earth Overall Best in Gown, Mrs Earth Overall Best In Resort wear, Mrs Earth Best In Talent ஆகிய அனைத்து துணைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

 
Mrs Earth Sri Lanka 2023 போட்டியின் தேசிய இயக்குனர் சரித் குணசேகர மற்றும் அவரது பயிற்சியாளர் ருக்மல் சேனாநாயக்க ஆகியோர் அவரது பயிற்சியாளராக பணியாற்றியுள்ளனர்.

 
Mrs Earth 2023 போட்டியில் பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 

No comments

Powered by Blogger.