சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பு குறித்து தயாசிறியின் அறிவிப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் விரும்பினால், கட்சியின் தலைமை கோரினால் தலைமை பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை வெற்றிப்பாதையில் பயணிக்கச் செய்யப்படுவதற்கு தான் செயற்படுவதாக கூறியுள்ளார்.
கட்சித் தலைவர் தேவையானவற்றை புரிந்து கொண்டு சரியான நேரத்தில் செயல்படுவார் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment