Header Ads



கொழும்பில் உயரமான கட்டடங்களுக்கு சிக்கல்..?


இலங்கைக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கொழும்பில் உள்ள பாரிய, மற்றும் உயரமான கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


இலங்கையில் தென்கிழக்கு கடற்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,


“நேற்று, தென்கிழக்கு கடற்பகுதியில், குறிப்பாக கொழும்பு பகுதியில் ஏற்பட்ட அதிர்வை இலங்கையின் பல பகுதிகள் உணர்ந்தன.மேற்கு மாகாணம் இந்த அதிர்வை உணர்ந்தது.


அதாவது தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் காரணமாக மேற்கு மாகாணத்தில் உள்ள உயரமான கட்டடங்கள் கண்டிப்பாக பாதிக்கப்படலாம். அந்த பகுதிகளில் உயரமான கட்டடங்கள் தீங்கு விளைவிக்கும்.


எனவே நாம் செய்ய வேண்டிய ஒன்று இலங்கையில் உள்ள புதிய மற்றும் பழைய கட்டடங்களை வகைப்படுத்துவது. குறிப்பாக உயரமான கட்டடங்கள். பூமியின் புவியியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இந்த கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனவா?மேலும், நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளனவா?அந்த கட்டடங்களின் அடித்தளங்கள் சரியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளனவா?


இது தொடர்பாக ஆராய்ந்த பின்னர் ஆபத்தான கட்டடங்களை அடையாளம் கண்டு, சில சமயங்களில் அவற்றை சரிசெய்ய சில வழிமுறைகள் உள்ளன, சரிசெய்யக்கூடிய கட்டடங்கள் சரி செய்யப்படவேண்டும், சரிசெய்ய முடியாத கட்டடங்கள் அகற்றப்படவேண்டும். அந்த நிலை குறித்து இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 


No comments

Powered by Blogger.