மத நம்பிக்கையினால் குழந்தைகளுக்கு தடுப்பூசியை, தவிர்க்கும் பெற்றோருக்கு மருத்துவரின் எச்சரிக்கை
வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்திற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து தட்டம்மை நோய் இல்லாதொழிக்கப்பட்டது.
அதன்படி தெற்காசியாவில் தட்டம்மை நோயை இல்லாதொழித்த 5 நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகிறது.
இந்நிலையில் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 15 குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் அவர்களில் 7 பேருக்கு தட்டம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் தட்டம்மை தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் சுவாசக் குழாய் வழியாக உடலுக்குள் நுழைந்து சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் கண் சிவத்தல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
சில மத நம்பிக்கைகள் காரணமாக தடுப்பூசி போடுவதை சிலர் தவிர்ப்பதால் அம்மை நோய் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடாது இருப்பது நிச்சியமாக மதநம்பிக்கையல்ல. அது தான் தலைக்கேரிய பச்ச மூடநம்பிக்கை. இது போன்ற நபர்களை இனங்கண்டு சட்டரீதியாக அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். அது தவிர குழந்தைகளை இந்த நோயிலிருந்து காப்பாற்ற வேறு வழியில்லை.
ReplyDelete