புத்தளத்திலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கியது (படங்கள்)
கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில் சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
புத்தளத்திலிருந்து - நுவரெலியா நோக்கி பயணித்த குறித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலாவுக்குச் சென்ற சிலரே விபத்தில் சிக்கியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் நால்வர் கொத்மலை பிராந்திய வைத்தியசாலையிலும் மேலும் நால்வர் புஸ்ஸல்லாவ வஹுகபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவருகின்றது என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
Post a Comment