Header Ads



ரணிலுடனான சந்திப்பு ஒரு நாடகம், அவரிடம் உருப்படியான திட்டம் எதுவும் இல்லை


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு நாளை (20) பயணிக்கவுள்ளார்.


இந்திய விஜயத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.


இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் இன்று கருத்துகளை முன்வைத்தன.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய சந்திப்பில் பங்கேற்கவில்லை.


வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனைகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்திருந்தார்.


பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்விற்கு இணங்கினால் மாத்திரமே 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.


நேற்றைய கலந்துரையாடல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இன்று கருத்து தெரிவித்தார்.


பிரச்சினைகளுக்கான தீர்வினை ஜனாதிபதி பெற்றுத்தருவார் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார். 

 

நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் சர்வதேசத்திற்கு காண்பிக்கும் ஒரு நாடகம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார். 


அதிகாரப் பகிர்வு தொடர்பிலோ இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலோ எவ்வித உருப்படியான திட்டமும் ஜனாதிபதியிடம் இல்லை என சுமந்திரன் கூறினார். 


உலகிற்கும் இந்தியாவிற்கும் காண்பிக்கும் நாடகமாகவே இந்த சந்திப்பை ஜனாதிபதி ஒழுங்குபடுத்தியிருந்ததாகவும் சமஷ்டி முறையிலான ஆட்சி மாற்றம் தேவை என தாம் வலியுறுத்தியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார். 


எனினும், 13 ஆவது திருத்தத்தில் இருப்பதைக் கூட முழுமையாக அமுல்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் தான் ஜனாதிபதி இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

1 comment:

  1. சர்வதேசத்தையும் குறிப்பாக இந்தியா, அமெரிக்காவை ஏமாற்றும் முயற்சியின் ஒரு அம்சம் தான் இந்த தமிழ் தரப்புகளுடனான பேச்சுவார்த்தைகள். இதனைக் காட்டி நான் உள்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமை,சமரசம், புரிந்துணர்வை ஏற்படுத்திவிட்டேன் எனவே எனக்கு இன்னும் ஆயிரம் கோடி தாருங்கள் என சர்வதேச நிறுவனங்கிடம் கடன், கைமாற்று பெற்றுக் கொள்ளவும் ஒரு தந்திரம் இது. இந்த இரகசியத்தைப்புரிந்து வைத்திருந்த தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்த கொள்ளவில்லை. உண்மையில் இந்த தமிழ் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒன்றாக செயற்பட்டால் அங்கு மற்றொரு சக்திக்கு இடமிருக்காது. ஆனால் அனைத்து தமிழ் கட்சிகளும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. அதில் அவர்கள் தவறினால் அனைத்தும் சிதறி சின்னாபின்னமாகி விடும். அதுதான் அனைத்து விவகாரங்களிலும் கிழக்கு வடக்கு முஸ்லிம்களுடன் இணைந்து அவர்களின் கவலை, தேவைகள், இலக்குகளை மதித்து அவர்களுடன் இணக்கமாகச் செல்லாவிட்டால் தமிழ் கட்சிகளின் முயற்சிகள அனைத்தும் தவிடு பொடியாகி சின்னாபின்னமாகி விடும். முதலில் வடக்கு கிழக்கை இணைப்பது என்ற இனவாதம் தழுவிய கருத்தை முற்றாகக் கைவிடுங்கள். வடக்கிலிப்பவர்கள் வடக்கில் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளட்டும். கிழக்கில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் அவர்களிடையே இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.