Header Ads



காணிவேல் நிகழ்வில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு


கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாத்தியகம பொது மைதானத்தில் நடைபெற்ற காணிவேல் நிகழ்வு ஒன்றில் பொலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கந்தளாய் வாத்தியகம பகுதியைச் சேர்ந்த  47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


ஜே.எம்.ஜனக சூரன்ஜீவ கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .


நேற்று  (20) இரவு 11.30 மணியளவில் காணிவேல் நிகழ்வில் மேல் பலகையில் கடமையில் இருந்த போது சைக்கிள் ஓடும்  கிணற்றின் மேல் பகுதியில் இருந்த பலகை உடைந்து  கீழே விழுந்ததில் பலத்த காயங்களுடன் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .


மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.



- பாருக்-



No comments

Powered by Blogger.