இலங்கையில் சுவீடன் தூதரகத்தை திறவுங்கள்
இப்போது அதன் சேவைகள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தான் நடைபெற்ற வருகின்றது. மாணவர்களின் கல்வி விசாவை பெற்று கொள்ள, வேலைபெற்று கொள்ள மற்றும் இன்னும் பல சேவைகளை பெற இந்தியா போக வேண்டியுள்ளது.
இப்படி விசாவை பெற இந்தியாக்கு செலவழித்து போய்,விசா பெறாமல் வரும் நபர்களோ எராளம்.
அதில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். இப்படி குடும்பத்தோடு பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை கணக்கில் எடுத்தால் பல மில்லியன்கள் தொடும்.
மேலும் எமது இலங்கையானது தனித்துவமான நாடு.ஒரு நாட்டுக்கான தூதரகம் அந்த நாட்டிலே அமைவதே நாட்டின் தனித்துவத்தையும் மற்றும் கெளரவத்தையும் பாதுகாக்கும்.
எனவே நாட்டின் ஜனாதிபதி அவர்களே, வெளிவிவகார அமைச்சர்களே,இதர அமைச்சர்களே, சுவீடன் நாட்டீன் தூதரே இதனை கவனித்தில் எடுத்து மிகவிரைவாக 2010 யில் மூடப்பட்ட சுவீடன் நாட்டுக்கான தூதரகத்தை மீண்டும் திறக்க உதவுமாறு இலங்கை பிரஜையாக வேண்டுகிறேன்.
- Ismayeel -
உலகம் முழுவதிலும் உள்ள ஏறத்தாழ 51 இலங்கைத் தூதரகங்கள், கொன்ஸுயூலர் காரியாலங்கள், ஹைகொமிஸன் காரியாலங்களை நடாத்துவதில் நாடு பயங்கரமான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த நேரத்தில் புதிய ஒரு தூதரகத்தை இலங்கை சுவீடன் நாட்டில் கேட்பது எப்படிப் போனாலும் அங்கிருந்து பிச்சைகள் கேட்கத் தயாராகிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் இது. கடந்த மாதம் வௌிவந்த நியூயோர்க் டைம் சஞ்சிகையில் இலங்கையை international Mendicant என்ற சிறப்புப் பெயரிட்டு அழைத்திருந்தது. அதாவது இலங்கை சர்வதேச பிச்சைக்காரன், செல்லும் நாடெல்லாம் பங்களாதேஷ் துவங்கி இந்தியா, அமெரிக்கா உற்பட்ட எல்லா உலகநாடுகளிலும் பிச்சை கேட்பதைப் பெருமையாக நினைத்துக் கொண்டு டைகோர் அடித்து பிச்சை கேட்கும் உலகில் முதன்மை நாடு இலங்கை. எங்கள் ஆள்பார்வை அமைச்சர் ஒருவர் சென்ற மாதம் சவூதி அரேபியா சென்று வழமையான பிச்சை கேட்ட போது எங்கள் முஸ்லிம் சகோதரர்களின் உடலைத் தீயிட்டுக் கொளுத்துவதைப் பார்த்துக் கொண்டிருந்த நீர் பிச்சை கேட்டு சவூதி அரேபியா பக்கம் வரவேண்டாம் என்ற பதில் கிடைத்ததாக அரசியல் மட்டத்தில் பேச்சுப் பொருளாக இருக்கின்றது. டைகோர்ட்டுக்கு உலக மட்டத்தில் இருந்த மதிப்பையும் இல்லாமல் செய்து பிச்சைக்காரர்களாக வாழந்து கொண்டிருக்கும் இந்த தியவன்னாவையின் பிச்சைக்காரர்கள் இனியாவது தேர்தலை வைத்து விட்டு உரியவர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு ஒதுங்கிவிட மாட்டார்களா?
ReplyDelete