Header Ads



நியூசிலாந்தில் இலங்கை மாணவனின் வீரதீரச் செயல் - தாயிடம் கூறிய உணர்ச்சிமிகு வார்த்தைகள் - பொதுநலவாய விருது பெற்றான்


பொதுநலவாய நாடுகளின் பிரஜைகளுக்கு வழங்கப்படும் மவுண்ட்பேட்டன் பதக்கத்தை வென்ற மிகவும் இளையவர் என்ற பெருமையை நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை மாணவனான கல்ய கமகே பெற்றுள்ளார்.


தெற்கு ஒடாகோ மாணவரான கல்ய கமகே, கடுமையன அலையில் இருந்து தனது தம்பியை வீரத்துடன் மீட்டதற்காக இந்த பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக தி ஸ்டஃப் செய்தி வெளியிட்டுள்ளது.


கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி, அப்போது 13 வயதுடைய கல்ய கந்தேகொட கமகே தனது 11 வயது சகோதரன் கித்மியுடன் கிறிஸ்டல்ஸ் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தார்.


இதன்போது ஒரு பெரிய அலை அவரது இளைய சகோதரனை இருந்து இழுத்துச் சென்றதுடன் அவர் நீரில் மூழ்கினார். சிறந்த நீச்சல் வீரரான கித்மி, கரை திரும்ப முற்பட்ட போதிலும் அவரால் முடியவில்லை.


அலையுடன் போராடிய கித்மி மிகவும் சோர்வடைந்தார். இதன்போது மிகவும் துணிச்சலுடன் செயற்பட்ட கல்ய கமகே தனது சகோதரனை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டுவந்திருந்தார்.


சகோதரனை மீட்க செல்லும் முன் “சரி அம்மா, நான் போகிறேன். நான் திரும்பி வராமல் இருக்கலாம்.’’ என கல்ய கமகே தனது தாயிடம் கூறிவிட்டு, கடும் குளிடன் கூடிய அலையில் இறங்கியுள்ளார்.


கரையில் இருந்து 60 மீட்டர் தொலைவில் இருக்கும் தனது சகோதரனிடம் செல்லும் வழியில் பயப்படாமல் இருந்ததாகவும், அவரை அடைந்ததும் பயந்துவிட்டதாகவும் கல்ய கமகே கூறியுள்ளார்.


தானும் அவனது சகோதரனும் கரைக்கு திரும்ப முடியாமல் போகலாம் என்று கவலைப்பட்டதாகவும், எனினும், தனது சகோதரனை மீட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


எவ்வாறாயினும், இந்த சம்பவத்திற்கு பின்னர் இருவரும் கடல் அலை குறித்து மிகவும் கவனமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


"அந்த நீரில் யாரும் உயிர் பிழைக்கவில்லை, அது மிகவும் ஆபத்தானது''. சந்தேகத்திற்கு இடமின்றி, கல்யவின் துணிச்சலான செயல் அன்றைய தினம் அவரது சகோதரரின் உயிரைக் காப்பாற்றியது." என்று உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவரை கோடிட்டு ரோயல் லைஃப் சேவிங் சொசைட்டியின் மேற்கோள்ளிட்டுள்ளது.


கல்ய கமகே பொறியியலாளராக விரும்பியதுடன, தனது சொந்த நாடான இலங்கையில் அவர் மேற்கொண்ட நீச்சல் திறன் மற்றும் உயிர்காக்கும் பயிற்சியை மேம்படுத்தவும் விரும்பியுள்ளார்.


அந்த உயிர்காக்கும் திறன் கல்ய கமனே 2022 ஆம் ஆண்டுக்கான மவுண்ட்பேட்டன் பதக்கத்திற்குத் தகுதிபெற உதவியுள்ளது. இந்த பதக்கம் பொதுநலவாய நாடுகளின் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றது.


தற்போது 14 வயதான கலய கமகே, வீரத்திற்கான இந்த விருதை வென்ற மிக இளைய நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


மில்டனை தளமாகக் கொண்ட டோகோமெய்ரிரோ உயர்நிலைப் பாடசாலையில் நடைபெற்ற சிறப்புப் கூட்டத்தில் கல்யவுக்கு பதக்கம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.