தேர்தல் கண்காணிப்பாளராக மைத்திரிபால
கம்போடியாவில் நடைபெறும் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச பிரதிநிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படவுள்ளார்.
நாளைய தினம் இந்த நடவடிக்கைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்துகொள்ளவுள்ளார்.
சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு கம்போடியாவிற்கு நேற்று பயணித்த முன்னாள் ஜனாதிபதி, உலக தலைமைத்துவ மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.
உலக சமாதான மாநாட்டின் அழைப்பின் பேரில் மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கம்போடியாவை நேற்று பிற்பகல் சென்றடைந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் வரவேற்றார்.
கம்போடியாவில் தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கு பதவி வகிக்கவும், அவரை நியமித்தவரைத் திருப்திப்படுத்தவும் மிகவும் பொருத்தமானவர் இவர்தான். குறைந்தது ஒரு கோடி டொலராவது கைமாறியிருக்கும் என நம்பப்படுகின்றது.
ReplyDelete