Header Ads



இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று எதற்காக கூறுகிறேன் தெரியுமா..?


இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை அன்றும் கூறினேன். இன்றும் கூறுகின்றேன், என்றும் கூறுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் மேலும்  குறிப்பிடுகையில்,


இந்த நாட்டில் சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் தான் வாழ வேண்டும் என நான் எப்போதும் கூறவுமில்லை. கூறப் போவதுமில்லை.


சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால்தான் தெற்கில் உள்ள 52 சதவீதமான தமிழர்கள் கௌரவமான முறையில் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்கின்றார்கள்.


வடக்கில் சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கொழும்பில் தேர் வலம் வந்தது.


சிங்களவர்கள் இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தவர்களாக உள்ளார்கள். ஆனால் தமிழ் - முஸ்லிம் சமூகத்தினர் தங்க வர்த்தக  நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். சிங்களவர்கள் அவற்றை கொள்வனவு செய்கிறார்கள்.


கொழும்பில் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை. இதன் காரணமாகவே இலங்கை சிங்கள  பௌத்த நாடு என்று கூறுகின்றேனே தவிர ஏனைய இனத்தை புறக்கணிக்கும் நோக்கத்தில் அல்ல என தெரிவித்துள்ளார்.  


1 comment:

  1. கதையைப் புரட்டி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது, துவேசப் பருப்பு இனியும் இந்த நாட்டில் தேர்தலில் வெற்றிபெற்று பலவந்தாக ஆட்சி அமைக்கும் காலம் இனி வரப்போவதில்லை. அப்படி இனவாதிகள் கற்பனை செய்தால் அதற்கும் பொதுமக்கள் தேர்தல் வரும் போது சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். அதனால் தான் தேர்தல் இல்லாமல் சர்வஜன வாக்கு என்ற பெயரில் ஒரு போர்வையைப் போர்த்தி ஆட்சியில் ஆயிரமாயிரம் வருடங்கள் நிலைத்து நிற்கும் கற்பனை ஆட்சியாளர்களிடைய வியாபித்துப் போகின்றது. இறைவன் தூங்குவதில்லை, அனைத்து அட்டகாசங்களையும் நன்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றான். எப்போது அக்கிரமம் அளவுக்கு மீறுமோ அப்போது பிர்ஔனைத் தண்டித்த ரப் அவனுடைய அதிகாரத்தையும், பலத்தையும் காட்டுவான். அப்போது இந்த அக்கிரம ஆட்சியாளர்கள், காய்ந்து சருகாகிப் போன தென்னம் மட்டைகளாக இந்த அக்கிரமக்காரர்கள் பாதையோரங்களில் காயந்து சீரழிவார்கள். பொறுத்திருந்து எமது சத்தியாக்கிரகப் பணியைத் தொடருவோம்.

    ReplyDelete

Powered by Blogger.