தாம்பத்திய வாழ்வில் அதிர்ஷ்டம் என்ற ஒன்றே கிடையாது
ஒரு தம்பதி அன்பாகவும், இன்பமாகவும் வாழ்வதைக் கண்டால், அவர்கள் கொடுத்து வைத்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள் என்று நினைத்துவிடாதீர்கள்.
தாம்பத்திய வாழ்வில் அதிர்ஷ்டம் என்ற ஒன்றே கிடையாது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவும் புரிந்துணர்வோடும் வாழ எவ்வளவு விட்டுக்கொடுப்புக்களை செய்தார்கள், எத்தகைய சகிப்புக்களை செய்தார்கள் என்பது தெரியாது.
அவர்கள் அன்னியோன்னியமாக வாழ எத்தனை பல குற்றம் குறைகளை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்பது தெரியாது.
இல்லற வாழ்வு சிறக்க எத்தனை எத்தனை தவறுகளை, சறுக்கள்களை, இடர்பாடுகளை சகித்துக் கொண்டார்கள் என்பது தெரியாது.
வாழ்கை ஓடம் தொடர எத்தனை எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.
என்றும் வாழ்க்கை யாருக்கும் அதிர்ஷ்டமாக இருந்ததே இல்லை.
வாழ்க்கை என்பது, பரஸ்பரம் கொடுக்கல், வாங்கலாகும். தவறுகளை சகிப்பதாகும். பிழைகளை மன்னிப்பதாகும். விட்டுக்கொடுப்புக்களாகும், மனத்திருத்தி கொள்வதாகும், ஒற்றுமை வேற்றுமைகளை மனசார ஏற்பதாகும், அபிலாஷைகளை பகிர்ந்துகொள்வதாகும், இருதரப்பும் அன்பை, பாசத்தை நேசத்தை பகிர்ந்துகொள்வதாகும்.
தமிழாக்கம் / imran farook
Post a Comment