இறுதி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் மறுப்பு - குவைத்தில் மரண தண்டனை
இவ்வாறு உயிரிழந்தவர் மேல் ஹல்மில்லேவ அதிரணிகம பகுதியைச் சேர்ந்த ஜூட் ரவிந்து கூப்பர் (வயது 43) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் பிரியங்கரகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், அவரது சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர பிரியங்கரகம பொலிஸாரின் உறவினர்கள் விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரின் இறுதி விருப்பத்தின்படி, அவரது உடல் இலங்கையில் உள்ள அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் குவைத் தூதரகத்தின் ஊடாக உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்
அநுராதபுரம் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் எச்.எம்.சுனில் அதிராணிகம உயிரிழந்தவரின் வீட்டுக்குச் சென்று உறவினர்களுடன் கலந்துரையாடிய பின்னர், குவைத் தூதுவர் கே. காண்டீபனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உறவினர்கள் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment