Header Ads



காதலிக்கு சப்ரைஸ் கொடுக்க, காதலன் செய்த காரியம்


அவிசாவளை - தித்தெனிய பிரதேசத்தில் சுமார் 68 லட்சம் ரூபா பெறுமதியான கார் மற்றும் சுமார் 11,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த ஜுலை 8ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.


இதற்கமைய 9ஆம் திகதி பல்வத்த பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் ஓட்டுநர் சோதனைக்காக காரின் உரிமையாளருடன் சென்றுள்ளார்.


அங்கு, காரில் ஏதோ சத்தம் கேட்டதாகவும், காரில் இருந்து இறங்கி, சத்தம் கேட்ட இடத்தை சோதனை செய்யுமாறு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.


உரிமையாளர் சோதனையிட்ட போது சந்தேகநபர் காரை ஓட்டிக் கொண்டு தப்பி சென்றுள்ளார்.


சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது காதலியின் பிறந்தநாள் அன்று அவரை சப்ரைஸ் செய்வதற்காக காரை திருடியதாக குறிப்பிட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடைய கடுவெல, பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஹங்வெல்ல மற்றும் புத்தல பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.