Header Ads



உலக சாதனையுடன் பெருந்தொகை பணத்துடன், சவூதி கிளப்புக்காக ஆடப்போகும் எம்பாப்பே


பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கிலியன் எம்பாப்பேவை சுமார் 332 மில்லியன் டாலருக்கு வாங்க சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த அல் ஹிலால் (Al Hilal) கால்பந்தாட்ட கிளப் அணி முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை பிஎஸ்ஜி கிளப் அணி உறுதி செய்துள்ளது.


24 வயதான எம்பாப்பே, சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் பிரான்ஸ் நாட்டுக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் பிரதான ஸ்ட்ரைக்கராக அவர் உள்ளார். ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற வீரர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறையை சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரராகவும் அறியப்படுகிறார். 


கிளப் அளவிலான போட்டிகளில் விளையாட அவர் தற்போது பிஎஸ்ஜி அணியில் உள்ளார். அவருக்கான ஒப்பந்தம் அடுத்த சீசன் வரை இருப்பதாக தெரிகிறது.


அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி முயன்றுள்ளது. ஆனால், எம்பாப்பே அதை நீட்டிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியானது. அதனால், அந்த அணியின் ஆசிய சுற்றுப் பயணத்துக்கான தொடரில் அவர் இடம்பெறவில்லை என சொல்லப்படுகிறது. அதோடு பிஎஸ்ஜி அணியிலிருந்து அவர் வெளியேறுகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.


இந்தச் சூழலில் சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த அல் ஹிலால் கால்பந்தாட்ட அணி அவரை ஒரு சீசனுக்கு சுமார் 332 மில்லியன் டாலருக்கு வாங்க முன்வந்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மொத்த மதிப்பு ரூ.2,716.70 கோடி. இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. போர்ச்சுகல் நாட்டு கால்பந்து வீரர் ரொனால்டோ, சவுதி அரேபியா கால்பந்து அல் நஸர் (Al Nassr) கிளப் அணிக்காக தான் விளையாடி வருகிறார்.

No comments

Powered by Blogger.