போத்தல் மூடி சிக்கியதால், குழந்தை உயிரிழப்பு
மாத்தறை மாவட்டம் அக்குரெஸ்ஸ - தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் சிக்கிக்கொண்டதால் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு (15) குறித்த குழந்தை தனது வீட்டில் இருந்தபோது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 வயது 15 நாட்கள் நிறைந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
அவரது சகோதரர் மூடியை அகற்ற முயன்ற போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
குழந்தை சிகிச்சைக்காக கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அக்குரெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment