மாநகர சபை கூரையில் இருந்து மீட்கப்பட்டுள்ள பொருட்கள் யாருடையவை..
காலி - ஒரப்புவத்தையில் உள்ள மாநகர சபை கட்டிடத்தின் கூரைப்பகுதியில் வெற்றுப் பணப்பைகள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுக்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றம் கடவுச்சீட்டுக்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாநகர சபையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் இந்த கட்டிடத்தின் கூரைப்பகுதியின் மேல் வளர்ந்துள்ள மரக்கிளையை அகற்றும் போதே இந்த ஆவணங்களை கண்டெடுத்துள்ளனர்.
பேருந்துகள், வீடுகள் போன்ற இடங்களில் திருடப்பட்ட இவற்றை திருடியவர்கள் அப்பகுதியில் எறிந்துவிட்டு சென்றிருக்கலாமென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆவணங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment