Header Ads



நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிய வீரசேகர - உடனடியாக வெளியேற்றம்


- விஜயரத்தினம் சரவணன் -


முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா செவ்வாய்க்கிழமை (04) களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.


இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் வருகைதந்திருந்தார்.


இந் நிலையில் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை, இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத்வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்துத் தெரிவிக்க முற்பட்டார்.


அப்போது அவரது கருத்தினை ஏற்க மறுத்த நீதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியாது எனவும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுவதாகவும், அங்கிருந்து சரத் வீரசேகரவினை விலகிச் செல்லுமாறும் எச்சரித்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அங்கிருந்து வெளியேற்றி அவனை சிறையில் தள்ளியிருக்க வேண்டும். அடுத்த முறை கௌரவ நீதிபதி அதனைச் செய்வார் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.