Header Ads



ரிஹானா அன்வர்ஷாவின் இலட்சியம் (ஒரு தந்தையின் சபதம்)


கத்தார் நாட்டில் இயங்கி கொண்டு இருக்கும் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் வெளியீட்டில் ரிஹானா அன்வர்ஷா இஷாக் எழுதிய இலட்சியம் (ஒரு தந்தையின் சபதம்) சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (16) மஹ்மூத் கேட்போர் கூடம் கம்பளை சாஹிரா கல்லூரியில் இடம்பெற்றது.


இந் நிகழ்வுக்கு கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடக செயலாளர் பிரதம அதிதியாக எம் ஆர் ஹஷிம் தீன் கௌரவ அதிதிகளாக கலாபூஷணம் இலக்கியத் தாரகை நயிமா சித்திக், ஆசிரியர் மா கோகுலதீபன், உரிமையாளர் கண்டி கார் டிரேடிங்.இப்திகார் அலி, வழக்கறிஞர் பிரசித்த நொத்தாரிஸ், எம் டி நிஹால் அகமட், வெளியீட்டாளர்களான ஸ்கை தமிழ் ஊடகத்தின் பிராந்திய முகாமையாளரும் துணிந்தெழு சஞ்சிகையின் இணை ஆசிரியருமான ஷிஹானா நௌபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


நூல் வெளியீட்டின் போது முதல் பிரதியை நூலாசிரியர் ரிஹானா அன்வர் ஷாலினி தாய் ஆயிஷா அம்மா அன்பர்ஷா அவர்களின் கையில் வழங்கப்பட்டது. பிரதம அதிதி கௌரவ அதிதி சிறப்பு அதிதிகளுட்பட குடும்பத்தினருக்கும் நூலாசிரியரின் நண்பர்கள் மற்றும் சில முக்கிய பிரமுகர்களுக்கும் நூலாசிரியரின் கைகளால் நூல் வழங்கப்பட்டது.


நிகழ்வின் போது நூலாசிரியர் அறிமுகத்தை கலாபூஷணம் நைமா சித்தி பற்றி வைத்தார். நூலின் நயவுரை ஆசிரியர் மா கோகுல தீபனால் வழங்கப்பட்டது. அத்துடன் பிரதம அதிதி கல்வி இராஜாங்க க அமைச்சின் ஊடக செயலாளர் எம். ஆர் ஹஷீம் டீன் அவர்களின் உரையும் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட வெளியேத்தாளர்களான ஸ்கை தமிழ் ஊடகத்தின் பிராந்திய முகாமையாளரும் துணிந்தெழு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான ஷிஹானா நௌபர் சிறப்பு உரை நிகழ்த்தினார்.


கம்பளை சாஹிரா கல்லூரியின் 1994 ஆம் ஆண்டை சேர்ந்த பழைய மாணவர்களின் எற்பாட்டில் ஸ்கை தமிழ் ஊடகத்தின் பிராந்திய முகாமையாளரும் துணிந்தெழு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான ஷிஹானா நௌபர் இன் வழிகாட்டல் மற்றும் திட்டமிடலின் கீழ் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.