தேயிலை கொழுந்துடன் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது
நுவரெலியா திம்புளை பத்தனை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட மவுன்ட்வேர்னன் பகுதியில் தொழிற்சாலை வாகனமொன்று (டெக்டர்) 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (29.07.2023) மதியம் 02 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தேயிலை கொழுந்து மூடைகளை தோட்ட தொழிற்சாலைகளுக்கு ஏற்றிச்சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக கொட்டக்கலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனறமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment