Header Ads



குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு ஜனாதிபதி கண்டனம் - ஜெனீவா மனித உரிமைகள் சபை மௌனம் காப்பது ஏன் எனக் கேள்வி


சுவீடன் நாட்டில் புனித குர்-ஆன் எரிக்கப்பட்டது வழிபாட்டுச் சுதந்திரத்தை மீறும் செயல் எனத் தெரிவித்ததுடன், ஜெனீவாவிலுள்ள  மனித உரிமைகள் சபை இது குறித்து இன்னும் அமைதி காப்பது ஏன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.


இச்சம்பவத்துக்கு இணங்கி இதை கருத்துச் சுதந்திரம் என மனித உரிமைகள் சபை கூறுமாயின் சர்வதேசத்தில் தெற்கு மற்றும் மேற்கத்திய அமைப்புகளுக்கு இடையே பிளவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


"இந் நிகழ்வை கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் மழுங்கடிக்க முடியாது. பெரும்பாலானவர்கள் இதை  மதத்தின் மீதான தாக்குதலாக கருதுகின்றனர். ஆனால் இதனை ஆதரிக்கும் சில மேற்கத்திய தேசங்கள், பெரும் சீர்குலைவை உள்ளடக்குவதற்காக கருத்து சுதந்திரத்தின் துறைகளை விரிவுபடுத்துகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார். TM

1 comment:

  1. ஆகா, என்னே அழகு, அல்குர்ஆனை எரித்த சம்பவத்தை முற்படுத்தி மனித உரிமைகள் சபை அதை எதிர்க்க வேண்டும் எனக் கூறும் சனாதிபதி அவர்கள் காஸா, ஜெனின் அப்பாவி மக்களின் ஆயிரக்கணக்கான வீடுகளையும் சொத்துகளையும் எரித்து அதில் வாழ்ந்த மக்களைத் துரத்தியடித்துவிட்டு அந்த வீடு வாசல்களை பலாத்காரமாக கைப்பற்ற இஸ்ரவேல் படைகளுக்கு என்ன அதிகாரமிருனக்கின்றது, அது பற்றி இந்த சனாதிபதி ஒரு வார்த்தை கூறினாரா? ஜெனின் அகதி முகாம்களில் வாழ்ந்த மக்களின் அற்ப உடைமைகளைத் தீயிட்டு கொழுத்தி அவர் பல அகதிகளைக் கொன்று குவித்த இஸ்ரவேலின் அட்டூழியம், அநியாயத்துக்கு எதிராக குறைந்த பட்சம் இந்த சனாதிபதி குரல் கொடுத்தாரா? அல்குர்ஆனை எரித்ததை எந்த முஸ்லிமும் குறிப்பாக புத்தியுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்வதில்லை. நாம் அந்த இனவெறியனைத் தண்டிக்கும் பொறுப்பை அந்த அல்குர்ஆனின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டோம். அந்த உரிமையாளன் அவனுக்கு உரிய தண்டனையைக் கொடுக்கப் போதுமானவன். ஆனால் அநியாயமாக மனித உயிர்களையும் அவர்களுடைய உடைமைகளையும் அழிப்பதையும் எந்த நியாயமுமின்றி
    அந்த சைத்தான்களின் ஆக்கிரமிப்புக் கொள்கையை பலாத்காரமாக விரிவு படுத்தும் நோக்கில் அவர்களைக் கொன்று குவிப்பதையும் அவர்களின் உடைமைகளை அழிப்பதையும் உலகில் அத்தனை மனிதர்களும் குறிப்பாக ஆட்சியாளர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் பலமாக எதிர்க்க வேண்டும். இஸ்ரவேலின் உற்பத்திகளைப் புறக்கணிக்க வேண்டும். எந்த ஒரு பொருளையும் இஸ்ரவேலிடமிருந்து வாங்கக் கூடாது. அவ்வாறு உலக நாடுகள் பொருளாதாரப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டால் மாத்திரம்தான் இஸ்ரவேல் சைத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்கலாம். அந்த முயற்சியை மேற்கொள்வோமா?

    ReplyDelete

Powered by Blogger.