Header Ads



இது அதிர்ச்சியூட்டும் சம்பவம் - (ஒரு விழிப்புணர்வு பதிவு)


அஹுகம்மன பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயதுடைய அண்ணன் இரண்டு மாத பெண் குழந்தையான தங்கையின் வாயில் நாணயத்தை செருகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.


தொம்பே, அஹுகம்மன பிரதேசத்தில் நேற்று (02) இவ் அதிர்ச்சி ஊட்டும் சம்பவம் இடம் பெற்றுள்ளது.


அக் குழந்தையின் வாயில் நாணயத்தை செருகியதால் அது தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இரு பிள்ளைகளும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது ​​மூத்த பிள்ளை தனது தங்கையின் வாயில் நாணயத்தை திணித்ததாக தொம்பே காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தொண்டையில் நாணயம் சிக்கியிருந்த சிசுவை தொம்பே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் சிசு இறந்துவிட்டதாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இருப்பினும் சிசுவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ரமேஷ் அழகியவண்ண மேற்கொண்டுள்ளார்.


குறிப்பாக மூச்சுக்குழாய் அடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக தடயவியல் நிபுணர் மருத்துவ அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். JV


No comments

Powered by Blogger.