Header Ads



இலங்கையர்களான தந்தையும், மகனும் இத்தாலியில் மரணம்


வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் தங்களது உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.


இதன்போது தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்த 60 வயது தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். எனினும், இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  


இதனையடுத்து, அங்கு சென்ற அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

No comments

Powered by Blogger.