கொழும்பில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது
கண்டி ஸ்கை விவ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விசேட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொழும்பில் கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலம் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
கொழும்புக்கு சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்துவதால், அங்கு போய் வருவது மட்டுமே நடக்கும் வேறு எதுவும் நடக்காது.
அரசியல் அதிகாரத்தை கொண்டுள்ள அணியினர் நடைமுறையில் உள்ள முறையை மாற்ற விரும்புவதில்லை என்பதுடன் மாற்றத்தை ஏற்படுத்த இடமளிப்பதுமில்லை.
சிறந்த முறையில் அமைப்பு ரீதியான மாதற்றத்தை ஏற்படுத்துவதற்கான தலையீடுகளை மேற்கொள்வதை அனைவரும் தமது பிரதான பணியாக மாற்றிக்கொள்ள வேண்டும்
அரசியல் விஞ்ஞான ரீதியாக பார்க்கும் போது தேர்தல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை ஆட்சியாளர்கள் வழங்க மாட்டார்கள்.
அடக்குமுறையாளர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு தட்டில் வைத்து அதிகாரத்தைக் கொடுத்ததில்லை என்பது வரலாறு முழுவதும் காணக்கூடிய நிலைமை.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் ஆட்சியாளர்கள் இந்த வரலாற்றையே எமக்கு கற்பித்துள்ளனர்.
இந்த பின்னணியில் வீதியில் இறங்குவதை தவிர மாற்று வழிகள் கிடையாது. அடக்கப்பட்ட வகுப்பினர் மற்றும் முற்போக்கு சக்திகள் வீதியில் இறங்க தயாராக வேண்டும்.
இவர்களின் ஆட்சியின் கீழ் இருக்கவும் வரிகளை செலுத்தவும் தயாரில்லை என்ற செய்தியை வழங்க வேண்டும்.
இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நியாயமான தேர்தலை பெற்றுக்கொள்ள முடியாது.
இவர்கள் வீட்டுக்கு அனுப்புவதன் மூலமே எதிர்பார்த்த விதமான தேர்தலை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கே.டி.லால்காந்த மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment