Header Ads



இளைஞனின் சடலம் மீட்பு


வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று (29) காலை மீட்டெடுத்துள்ளனர்.


உயிரிழந்த இளைஞருக்கு அருகே கட்டுத் துப்பாக்கியும்  அவ் இளைஞரின் மோட்டார் சைக்கிளும் காணப்பட்ட நிலையில் இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


அதே, கிராமத்தினை சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


-தீபன்-

No comments

Powered by Blogger.