Header Ads



பொலிஸ் நிலையத்தில் முறை சென்றவர் அங்கேயே மயங்கி வீழ்ந்து மரணம்


- எம்.றொசாந்த்  -


இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 


யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் ஹரிச்சந்திரன் (வயது 66) என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார். 


யாழ்ப்பாண நகர மத்தி பகுதியில் ஓடுகள் விற்பனை செய்யும் கடையொன்றினை உயிரிழந்த முதியவர் நடாத்தி வந்திருந்தார். அவரிடம் ஓடு வாங்கிய இளைஞன் ஒருவர் , மிகுதி பணத்தினை வழங்காது காலம் கடத்தி வந்துள்ளார். 


அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞனுக்கும் முதியவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதில் , இளைஞன் முதியவரை தாக்கியுள்ளார். 


தான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தினுள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 


முதியவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , முதியவரை தாக்கிய இளைஞனை பொலிஸார் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.