Header Ads



பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று பாராளுமன்றத்தில், நிகழ்த்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க உரை


பலஸ்தீனத்திற்கு ஆதரவாக  பாராளுமன்றத்தில் இன்று 19-07-2023 பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பார்க்கீர் மார்கார் ஆற்றிய உரை


மனித வரலாற்றில் மிகவும் துன்பகரமான சூழ்நிலையை நாம் இன்று மத்திய கிழக்கு பிராந்தியத்தில் காண்கிறோம். சொல் வியாக்கியான விளக்கம் போலவே அது துன்பகரமானது. ஏழு தசாப்தங்களுக்கும் அதிக காலப்பகுதியில் இடம்பெறும் இந்த கொடூரமான வன்செயல்களை அதே நிலையில் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இடமளிப்பது எந்தவொரு மனிதரதும் மனட்சாட்சிக்கு ஏற்புடையதொரு விடயமல்ல. 


இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருப்பதாக நான் கருதவில்லை. இந்தப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வுகாணும் வகையில் சுயாதீனமான இரு தேசங்களை உருவாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு எடுத்த தீர்மானமானத்துக்கு வரலாறு முழுவதும் இலங்கை பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளினதும் ஏகமனதான பூரண ஒத்தாசை கிடைக்கப்பெற்றுள்ளது. 


பலஸ்தீன் மக்களின் சுயாதீனம், சயஅபிலாசைகள், சுதந்திர உரிமைகள் தொடர்பான திடமான நிலைப்பாட்டைக் கொண்ட இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை அலங்கரித்த அபிமானத்தைப் பெற்ற இரு தலைவர்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது எனது கடமையென நான் கருதுகின்றேன்.  


அவர்கள், பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்களுமாவார். உண்மைக்கு முன் நிற்பதில் எந்தவொரு சலுகைகளையும் எதிர்பார்த்தோ அல்லது பயமுறுத்தல்களுக்கோ, அல்லது அச்சுறுத்தல்களுக்கோ இந்த தலைவர்கள் தலைசாய்க்கவில்லை. 


கடந்தகால தலைவர்கள் அனைவரும் எமக்கு வழங்கிய முன்மாதிரிகள் நாம் செல்ல வேண்டிய சரியான பாதையில் இன்றும் ஒளியூட்டுகிறன என்பதை குறிப்பிட வேண்டும். 


கௌரவ சபாநாயகர் அவர்களே!


அதேபோல எமது கடந்தகால தலைவர்கள் வேறுபட்ட சிக்கல்மிக்க சூழ்நிலைகளில் எமது வெளிநாட்டு கொள்கைக்கு கௌரவம் சோ்க்கும் வகையில் செயற்பட்ட சந்தர்ப்பங்கள் எனது நினைவில் வருகிறது. 


50 ஆம் தசாப்தத்தின் ஆரம்பத்தில் சீனாவுடனான இறப்பர் - அரிசி உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடும் சந்தர்ப்பம் அதில் ஒன்றாகும். சீனாவுடன் உறவை வைத்திருந்தால் மேற்கத்தேய உதவிகள் நிறுத்தப்படும் என்ற வலுவான அழுத்தங்கள் வந்தாலும் அந்த அழுத்தங்களுக்கு தலைசாய்க்காது அப்போதைய பிரமதர் டட்லி சேனாநாயக்க அவர்கள் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட தீர்மானித்தமை இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு ஞாபகத்தில் வருகிறது. 


அதேபோல, பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் ஜே. ஆர். ஜயவர்தன அவர்கள் ஆற்றிய உரை எனது நினைவில் வருகிறது. இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் செய்த அனர்தங்களுக்கு நஷ்டஈடு பெறப்பட வேண்டும் என்ற வல்லரச நாடுகளின் நிலைப்பாட்டுக்கு மாறாக அன்று இலங்கை அந்த மாநாட்டில் “பகைமையை பகைமையால் தீர்க்க முடியாது” (නහී වේරේන වේරානී) என்ற தம்ம பதத்தை மேற்கோள்காட்டி வீழ்ந்து கிடக்கும் நாட்டிடமிருந்து இழப்பீடு பெறுவதைக் காட்டிலும் அந்த நாட்டுக்கு எழுந்திருக்க உதவி செய்வதே செய்யப்பட வேண்டியது எனக் கூறியது. 


வெளிவிவகார விடயங்கள் தொடர்பான எமது முன்னைய தலைவர்களது இவ்வாறான முன்னெடுப்புக்களும் தீர்மானங்களும் இன்றும் எமக்கு  வழிகாட்டுகிறன.  


கௌரவ சபாநாயகர் அவர்களே!


இன்று இந்த சபையின்முன்னால், நான் முன்வைத்துள்ள இந்த முன்மொழிவானது மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதொன்றாக நான் நோக்கவில்லை. அறபு உலகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகவும் நான் நோக்கவில்லை.


அது பலஸ்தீன நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினையாகவும் நான் நோக்கவில்லை.


இது ஜனநாயகம் தொடர்பான ஒரு பிரச்சினை.

இது மனிதத்துவ பெறுமானம் தொடர்பான ஒரு பிரச்சினை.

இது நிறவேறுபாடு, இனவேறுபாடு தொடர்பான ஒரு பிரச்சினை.

இது சமூக அநீதி தொடர்பான ஒரு பிரச்சினை.

இது பலவந்தமாக நாடுகளை கைப்பற்றல்  தொடர்பான ஒரு பிரச்சினை.

இது ஆக்கிமிப்பு தொடர்பான ஒரு பிரச்சினை.

இது புதிய காலணித்துவ உபாயம் தொடர்பான ஒரு பிரச்சினை.


பொதுவாகவே ஐக்கியமயப்பட்டிருந்த அறபுமயமான மத்தியகிழக்கு பிராந்தியம் துண்டாடப்பட்டு யூத, இஸ்லாமிய, கிறிஸ்தவர் என்றும், ஷீஆ – சுன்னி என்றும் பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் அந்த பிராந்திய அரசியல் ஆதிக்கத்தை  கையிலெடுத்து ஆயுத வியாபாரம் மற்றும் சுரண்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் ஒரு பிரச்சினையாகும். 


நாளாந்தம் இந்த பூமியில் நடக்கும் மனிதப் படுகொலைகள், வாழிட அபகரிப்பு, வளமிக்க நிலங்களும் நீர் நிலைகளும் கொள்ளையிடப்படல் தொடர்பான ஒரு பிரச்சினையாகும். 


பலஸ்தீன மண்ணின் உண்மையான உரிமையாளர்களின் குடியியல் உரிமைகன் மறுக்கப்பட்டு அவர்கள் மூன்றாம் தரப்பு அடிமைக் குடிகளாக மாற்றப்பட்டுள்ளமை தொடர்பான ஒரு பிரச்சினை. 


பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களை அழித்து பல பரம்பரைகளாக பிள்ளைகளின் கல்வி உரிமைகளையும் எதிர்காலத்தையும் இருள்மயமாக்கல் தொடர்பான ஒரு பிரச்சினை. 


அதிகாரத்தின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ள பலஸ்தீன நிலப்பரப்பில், இன்று ஜெனின் பகுதியில் நடப்பது போல, ஆரம்ப குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கும் அகதிகள் முகாம்களுக்கும் நாளாந்தம் இராணுவம் ஊடுருவி எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி சிறு பிள்ளைகளையும் இளையோர்களையும், பெண்களையும் அச்சுறுத்தி அவர்களை கைதுசெய்வதன் மூலம் ஏழு தசாப்த காலமாக முன்னெடுக்கப்படும் சித்திரவதைகள் மற்றும் உலகத்தில் பலமிக்க இராணுவ சக்திக்கு எதிராக தாய்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அவர்கள் இதுவரை அபிலாசைகளுடன் தாங்கிக்கொண்டிருக்கும் அபூர்வத்தை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம். 


அதிகாரத்தின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ள நிலப்பரப்பை திறந்த சிறைச்சாலையாக மாற்றி நிலத்தாலும், வான்வழியாகவும் ஏவுகணை தாக்குதல் நடாத்தி முன்னெடுக்கும் மனிதப் படுகொலைகள், சொத்துக்கள் அழிப்பு மற்றும் காயப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்க இருக்கும் பாதைகளைக் கூட மறித்து மேற்கொள்ளப்படும் மனிதநேயமற்ற செயற்பாடாகும். 


நாம் இன்று பலஸ்தீன் பூமியில் காண்பது உலக மக்களுக்காக பூகோள நீதியை நிலைநாட்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் வெளிப்படையாகவே சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் ஒரு நிலைமையாகும்.   


ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும், மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கும், சர்வதேச நீதிமன்றத்துக்கும் வெறுமனே அறிக்கைகளை சமர்ப்பித்தல் மற்றும் அறிக்கை வெளியிடலுக்கு அப்பால் பூகோள நீதி, மனித உரிமைகள், சர்வதேச சட்டம் தொடர்பான எவ்வித சட்டரீதியான  அல்லது நீதிநெறியான பொறுப்புக்களையும் முன்னெடுக்க முடியாது இடையூராக நடந்துகொள்வதை தொடர்ந்தும் நாம் காண்கிறோம்.  


இருப்பினும், நாம் இன்று உலகில் காண்பது என்ன? கூட்டாகவும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதன் மூலம் உலகில் ஒன்றிணைந்து பல விடயங்களை பெற்றுக்கொடுப்பதை இலக்காகக்கொண்டு நிறுவப்பட்ட பல்பங்காளர் அமைப்புக்களை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை பலவீனப்படுத்தி செயலிழக்கச் செய்யும் செயற்பாட்டை நாம் காண்கிறோம்.  


யுத்தம் ஏற்படுவதை தடுத்து முரண்பாடுகளை நீக்கி சமாதானத்தையும் நிலையான தன்மையையும் உலகில் ஏற்படுத்தவும் சிறிய நாடுகளுக்கு பொருளாதார நியாயம் கிடைக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச நீதிமன்றம், UNCTAD, UNESCO போன்ற அமைப்புக்கள் பல்பங்காளர் அமைப்புக்களுக்கு நியாயமான முறையில் செயற்படுவதில் இடைஞ்சலாக அவற்றைப் பலவீனப்படுத்தும் செயற்பாட்டை நாம் காண்கிறோம். 


அனைத்து வகையிலும் அதிகாரமானது ஒரு சில நாடுகளின் கைகளில் தங்கியிருக்கும் நிலைமை வலுப்பெற்றுவரும் ஓர் உலகிலேயே  ஐக்கிய நாடுகள் அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச நீதிமன்றம், UNCTAD, UNESCO போன்ற பல்தரப்பு அமைப்புக்கள் நிறுவப்பட்டமையானது தீர்மானங்கள் எடுக்கும் போது சிறிய நாடுகளுக்கும் தமது குரலை உயிரோட்டமாக முன்வைப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவது மாத்திரமன்றி தீர்மானங்கள் எடுக்கும் போது அதில் அவர்கள் பங்களிப்புச் செய்வதற்கும் வழிசெய்வதாகும்.   


இங்கு எனக்கு ஞாபகம் வருகிறது, இஸ்ரேலின் வேண்டுதலுக்கமைய ஜெரூஸலத்தை தலைநகராக அங்கீகரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீர்மானித்தவேளை அதற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 14 நாடுகள்  வாக்களித்த நிலையிலும் அமொிக்காவின் இரத்து (வீட்டோ) அதிகாரத்தினால் அது செயலற்றுப்போனது. அதேபோல, இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளுக்குகான உதவிகள் நிறுத்தப்படும் என பகிரங்கமாகவே எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. 


வல்லரசு நாடுகளின் இவ்வாறான நடத்தை சிறிய நாடுகளின் நலன் பாதுகாப்புக்கான பல்தரப்பு கட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுவதுடன் இதனூடாக வழங்கப்படும் செய்தி யாதெனில் ஏனைய நாடுகளும் இஸ்ரேல் போன்று அதிகாரமிக்க ஒரு நாட்டின் ஆசிர்வாதத்துடன் தாமும் சர்வதேச சட்டங்களை பேணாமல்  செயற்பட எத்தனிக்க முடியும் என்பதாகும். 


இவ்வாறு ஜனநாயக அடிப்படைகளுக்கு முரணாக, சமூகநீதியும், மனித விழுமியங்களும், தேசத்தின் சுயாதீனமும் பச்சை பச்சையாகவே அபகரிக்கப்படும் வேளை எதுவும் செய்யமுடியாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருப்பது   உலக மக்கள் அபிப்பிராயத்துக்கும் உலகின் சிறிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது மனிதத்துவத்துக்கு ஒரு இலுக்கல்லவா? 


பலமிக்க வல்லரசுகளின் இரத்து அதிகாரமானது பூகோள நீதியை நிலைநிறுத்துவதை இலக்காகக் கொண்டும் மக்களது வாழும் உரிமை மற்றும் அபிலாசைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் பேணுவதிலும் பிரயோகிக்கப்பட்டிருக்க வேண்டும்.


கௌரவ சபாநாயகர் அவர்களே!

பலஸ்தீன் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடூரமான வன்செயல்கள் தொடர்பான மனதை உறுத்தும் உதாரணங்கள் ஏராளம். அவற்றில் இரு உதாரணங்களை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். 


அண்மையில் நடைபெற்ற பலஸ்தீன் கிறிஸ்தவ இனத்தைச் சோ்ந்த துணிச்சல்மிக்க ஊடகவியலாளரான சிரின் அபு அக்லேன் அவர்களின் படுகொலையும் அது தொடர்பான சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்காது செயற்படும்  நியாயத்துக்கு எதிராக சட்டத்துக்கும் மேலாக யையோங்கியுள்ள நிலைமையை நினைத்துப் பாருங்கள். 


இரண்டாவது உதாரணம், இஸ்ரேல் பிரஜைகளுக்கு வைத்தியம் செய்துகொண்டிருந்த பலஸ்தீன் வைத்தியரின் பிள்ளைகள் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட பிரபல்ய துன்பியல் நிகழ்வைப் பாருங்கள். இந்த வைத்தியர் காலியில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிக்கு கனடா நாட்டிலிருந்து வந்திருந்தார். அவர் எழுதிய ‘I Shall Not Hate - நான் பகைமை பேணமாட்டேன்’ எனும் நூல் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. மத்திய கிழக்கு பின்னணியுடனான இந்த வைத்தியரின் பெண் பிள்ளைகள் மூவருடன் அதே வீட்டில் இருந்த தனது சகோதரியின் மகளும் காசா மீதான தொடர் தாக்குதலில் கொலை செய்யப்பட்டனர். 


தனது பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் இஸ்ரேலில் இருக்கும் தனது நண்பன் இஸ்ரேல் இன ஊடகவியலாளரைத் தொடர்பு கொண்டுள்ளார். இஸ்ரேல் தொலைக்காட்சி சேவையின் நேரலை கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்டிருந்த இவர் தனது வைத்திய நண்பனின் தொலைபேசி அழைப்பைக் கண்டு, அவர் எப்போதும் மிக முக்கிய விடயங்களில் மாத்திரம் தொடர்புகொள்பவர் என்பதனால் உடனே அந்த அழைப்பை தொடர்பு கொண்டுள்ளார். 


“ஐயோ... ஷியோமி எனது பிள்ளைகளைக் கொலை செய்துள்ளனர். எனது மனைவினை அவர்கள் கொலை  செய்துள்ளனர். யா அல்லாஹ் எனது மகள்மார்கள்...” 


நேரலையில் வைத்தியரின் அலரல் இஸ்ரேல் மக்களுக்கும் உலகுக்கும் ஒலித்தது. 


தொலைபேசி அழைப்பில் அலரல் கேட்கும் போது அந்த ஊடவியலாளர் “என்னை மன்னியுங்கள்...என்னால் இன்னும் இங்கு இருக்க முடியாது. எனக்கு விடைபெற அனுமதியுங்கள்.” எனக் கூறி அவர் வெளியெறும் காட்சி தொலைக் காட்சியில் பதிவாகியது. 


இந்த நிகழ்வு தொடர்பாக தயாரிக்கப்பட்ட ஆனவனப் படத்தில் அவர் படுகொலைகள் நடைபெற்ற இடங்ககளைக் கட்டி அலரலுடன் விளக்கும் காட்சி உள்ளடக்கப்பட்டுள்ளது. 


இது அவரது வசனம், நான் மேற்கோள் காட்டுகிறேன்.


“இங்கு போராளிகள் இருக்கவில்லை. ஆயுதம் இருக்கவில்லை. எமக்கு சமாதானமாக வாழ முடியும். இந்த யுத்தம் எமது உயிர்களை இல்லாமல் செய்கிறது. யுத்தத்துக்கு உடந்தையாக இருக்க எவருக்குத்தான் முடியும்.” 


“இன்று, காசாவில் உணவில்லை. பட்டினி அதிகம். தொழில் இல்லை. மருந்து இல்லை. கல்விபெற முடியாது. சதந்திரம் இல்லை. சொற்கள் தேவையில்லை. இறைவனே! நாங்கள் மனிதர்கள். அவர்கள் இந்த தவறுகளை ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் நான் கவலையடைகிறேன்.” 


(மேற்கோள் நிறைவு)


இஸ்ரேலும் பலஸ்தீனும் இரு சுதந்திர தேசங்கள் என்பதை யதார்த்தமாக்கி அந்த தேசங்களில் வாழும் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அகிய அனைவரும் சமத்துவமாகவும் நியாயமாகவும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் மதித்து, வேறுபாடு காட்டாமல், வாழும் நாளைய தினம் உருவாக வேண்டும். இந்த நீதியையும் நியாயத்தையும் இந்த மசோதா ஊடாக இலங்கைப் பாராளுமனறம் இன்று உணர்த்தி நிற்கின்றது. 


இந்த வைத்தியர் அமொிக்காவுக்கு பயணம் செய்திருந்த வேளை அமரிக்க ஊடகவியலாளர் ஒருவர் “நீங்கள் ஏன் அமொிக்காவுக்கு வந்தீர்கள்? நீங்கள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு வழங்கும் செய்தி என்ன?” எனக் கேட்டார். இருப்பினும், அவர் எதிர்கொண்ட அவலங்களுக்கு மத்தியிலும் அவர் பகைமை பேணவேண்டாம் என்றும் கருணையுடன் நோக்குமாறும் வேண்டும் சக்தியுடனான வைத்தியரின் பதில் இவ்வாறு இருந்தது. 


நான் மேற்கோள் காட்டுகிறேன், 


“தயவுசெய்து பிழையை பிழையாக காணுங்கள். பிழை செய்பவராக இருப்பின், அவர் நண்பராயினும் பிழையை பிழையென்று கூறுங்கள். அதனை பலஸ்தீன் என்றோ இஸ்ரேல் என்றோ பார்க்கத் தேவையில்லை. வெளிப்படையாகவே உண்மையைப் பேசுங்கள்.” 


இதுவே அவர் அமொிக்க ஜனாதிபதிக்கு வழங்கிய செய்தியாகும். இந்த வைத்தியரின் பெயர் இஸதீன் அபூலிஷ். 


இன்று உக்கிரேனில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் ஏழு தசாப்த காலமாக பலஸ்தீனில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பாகவும் இரு வேறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கும் உலகுக்கு செய்தி வழங்கும் ஊடக தனித்துவஆதிக்கம் கொண்ட உரிமையாளர்களும் தமது மனட்சாட்சியை தட்டிக்கேற்க இந்த கூற்று போதுமானதென நான் நம்புகின்றேன். 


பலஸ்தீன் மண்ணில் வன்முறையை விதைத்தல், அபகரிக்கப்பட்ட நிலப் பரப்பில் தொடரும் பலவந்தமான விஸ்தரிப்பு, மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக அந்த இடத்துக்குச் சென்று தேடிப்பார்த்து விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்துள்ள வேண்டுதலை இஸ்ரேலின் பொறுப்புதாரிகள் கணக்கிலும் எடுக்காமல் இருப்பதை உலகம் அவதானித்துக் கொண்டுள்ளது. 


இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளைத் தேடிப்பார்த்து விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச நீதிமன்றத்துக்கும் அனுமதி மறுக்கும் இதுபோன்ற தன்னிச்சையான கொள்கைளும் காணக்கிடைக்கின்றன. 


இவ்வாறானதெரு நிலைமையானது, உலகில் எங்கும் இல்லாதவாறான சலுகைகளை அனுபவிக்க அங்கீகாரமளிப்பதாகும்.  


தொடர்ச்சியாக நடைபெறும் முரண்பாடுகளை தடுக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையை பலஸ்தீன் நாட்டின் எல்லைப் பகுதியில் நிறுத்தும் மசோதாவும் நிராகரிக்கப்படுகிறது. 


அன்று மேற்கற்தேய நாடுகளின் அதிகாரத்தைப் பிரயோகித்து பலஸ்தீனத்தின் உண்மையான உரிமையாளர்களின் எதிர்ப்பைக் கூட கவனத்திலெடுக்காது இஸ்ரேல் நாட்டை உருவாக்கும் வேளை சுயாதீனமான இரு நாடுகளை உருவாக்கும் முன்மொழிவும் ஒப்புதலும் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று சுயாதீன பலஸ்தீன் நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் பெரும்பகுதி பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளதுடன் அதிலும் திருப்பதியடையாது இஸ்ரேல் நில ஆக்கிரமிப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகிறது (வரைபடம் காண்பிக்கப்படுகிறது). இதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவது ஒருபுறமிருக்க அவை தொடர்பான எவ்விதமான முன்னனெடுப்புக்களுக்கும் தடங்களாக இருப்பது ஜனநாயக அடிப்படைகளுக்கான அவமரியாதையென என நாம் கருதுகிறோம். 


இது பற்றிப் பேசும் போது எனக்கு ஞாபகம் வருவது தென் ஆபிரிக்கா நாடு.


தென் ஆபிரிக்க கருப்பின மக்களும் இவ்வாறான நிறவேற்றுமை இனவாத (Apartheid) அடக்குமுறை காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர். 


அன்று தென் ஆபிரிக்கா தொடர்பாகவும் வெற்றுப் பேச்சுக்களேயன்றி அந்த நிலைமையை மாற்றுவதற்கான எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக தொடர்ந்தும் ஹிட்லர் பாணியிலான அடக்குமுறைக்கும் நிலஉரிமையாளர்களின் வளங்களைச் சுரண்டுவதற்குமான இனவாத ஆட்சிக்கு வழிவகுத்து வல்லரச நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த விதம் எனக்கு நினைவில் வருகிறது. 


இன்று பலஸ்தீனத்தில் இதே நிலைமையை அல்லவா நாம் காணுகிறோம்?


அன்று அந்த நிலைமைக்கு எதிராக எழுந்துநின்ற மன்டேலா போன்ற தலைவர்கள் உலகில் ஆயுத தயாரிப்பு நிறுவனங்களினதும் உலக பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் பிரதான செல்வந்த சக்திகளின் அதிகாரத்துக்கும் உட்பட்டு முழு உலகுக்கும் செய்தி வழங்கும் ஊடக முகவர்கள் மன்டேலாவின் பெயரை ஊடகத்தில் பிரயோகிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவரது பெயருக்கு முன் அடைமொழியாக  “பயங்கரவாதி” என்ற சொல்லையும் சோ்த்துக் கொண்டன. 


சுதந்திரத்துக்காக, ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான எழுச்சி சுதந்திரப் போராட்டமன்றி “பயங்கரவாதம்” என உலகுக்கு எடுத்துக்கூறவே அந்த ஊடக ஏகாதிபத்திய நிறுவனங்கள் முயற்சித்தன. அதன் மூலம் உலக மக்களை மூளைச்சலவை செய்யவே முயற்சித்தனர். 


இவை அவ்வாறே, பலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப தலைவர் யஸார் அரபாத் தொடர்பாகவும் கடைப்பிடிக்கப்பட்டது. 


மன்டேலாவை 20 வருட காலம் இருண்ட சிறையில் அடைத்து வைத்திருந்தனர். தென் ஆபிரிக்கா விடுதலையடைந்ததைத் தொடர்ந்து நெல்ஸன் மன்டேலா அவர்கள் கூறிய விடயத்தை நினைவூட்ட நான் விரும்புகிறேன். 


நான் மேற்கோள் காட்டுகிறேன், 


“பல வருட தோல்வியின் பின்னர் இன்று நாம் சுதந்திர நாடாக உள்ளோம். இருப்பினும், பலஸ்தீன் மண் ஒரு சுதந்திர தேசமாக விடுதலைசெய்யப்படும் வரை நாம் அடைந்த சுதந்திரம் பூரணமடையாது.”

(மேற்கோள் நிறைவு)


அந்த இலக்குடனும் சரியான நோக்குடனும் இன்றும் தென் ஆபிரிக்க மக்களும் தென் ஆபிரிக்க அரசும் தைரியமாகவு நிலையானதொரு கொள்கையுடன் செயற்படுவதை நாம் காண்கிறோம். 


எவ்வாறான சலுகைகள், பொருளாதார இலாபங்கள் முன்வைக்கப் படினும் தமது வெளிநாட்டுக் கொள்கையை விபச்சாரத்தில் நிறுத்த நாம் தயாரில்லையென தென் ஆபிரிக்க தலைவர் ஒருவர் கூறியது எனக்கு நினைவில் வருகிறது. 


பலமிக்க அரசுகள் மூலம் முன்னெடுக்கப்படும்  கவர்ச்சிகரமானதும் தற்காளிகமானதுமான பொருளாதார சலுகைகள் மற்றும் அதற்குச் சமாந்தரமாக முன்னெடுக்கப்படும் கடுமையான அழுத்தங்களுக்க மத்தியில் மனித இனத்தின் சுயகௌரவம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள், குறிப்பாக குடிமகனாக கௌரவமாக வாழும் உரிமைகளைப் பலிகொடுக்கும் முதுகெழும்பில்லாத கொள்கையைக் கடைப்பிடிக்காது மதிப்புக்குரிய மன்டேலா அவர்கள் காட்டிய வழியில் சுதந்திர பலஸ்தீன தேசத்தை அடையவதில் தென் ஆபிரிக்கா  திடகாத்திரமாக முன்நிற்பதானது உலகின் நீதியை வேண்டும் அனைத்து நாடுகளுக்குமான ஒரு சிறந்த முன்மாதிரியை விட்டுச்செல்கிறது என்பதை நான் கூற விரும்புகிறேன். 


கௌரவ சபாநாயகர் அவர்களே!


ஒருமுறை பலஸ்தீன் பிரச்சினை தொடர்பான விரிவுரையின் பின்னர் அமொிக்க பல்பலைக்கழக மாணவர் ஒருவர் வினா எழுப்பினார். அமொிக்காவில் உள்ள நாம் ஏன் உங்களது பிரச்சினை தொடர்பாக அக்கறைசெலுத்த வேண்டும் என அவர் கேட்டார். அப்போது அங்கு விரிவுரை நடாத்திய பேராசிரியர் அன்று கூறிய பதில் இன்றைக்கும் பொருந்துவது மாத்திரமன்றி அமொிக்கர்களுக்கு மாத்திரமன்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் யாவருக்கும் ஒரு அர்த்தமிக்க செய்தியை வழங்கியுள்ளார்.  


அன்று அந்த விரிவுரையைச் செய்தவர், அமொிக்க பல்கலைக்கழகத்தில் சேவை செய்த தைரியமிக்க கல்வியலாளரான கலாநிதி பியேஸ் ஸயேப் அவர்களாவார். கிறிஸ்தவ பக்தரான அவர் பலஸ்தீன் தேசத்தைச் சோ்ந்தவர். பேரூட் இஸ்ரேலிய ஆய்வு நிலைய ஸ்தாபகர் அவராவார். இஸ்ரேலிய ஆக்கிரம்புப் படை 1982 இல் இந்த நிலையத்தை தகர்ப்பதைக்காண அவர் உயிருடன் இருக்கவில்லை. 


நாம் ஏன் உங்களது பிரச்சினை தொடர்பாக அக்கறைசெலுத்த வேண்டும்? என்ற அமொிக்க இளைஞரின் கேள்விக்கு அவர் வழங்கிய விடை யாதெனில், அது  “Occupation Israel Over Palestine”  எனும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. அந்த நூலின் ஆசிரியர் Naseer Aruri ஆவார். சமாதானமான உலகை கட்டியெழுப்புவதில் கடைபிடிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் இந்த பேராசிரியரின் சுருக்கமான விடையில் உள்ளடங்கியுள்ளது. 


“ஐயா! எனது நாட்டில் நடைபெறும் பின்தங்கிய செயற்பாடுகள் பற்றி நான் வெட்கப்படுகிறேன். இருப்பினும் அவற்றை வரலாற்றின் இறுதி தீர்மானங்களாக ஏற்க எமது சந்ததியும், எமது பிள்ளைகளின் சந்ததியும் மறுக்கின்றமையையிட்டு நான் பெருமைப்படுகின்றேன்.  அது தொடர்பாக ஏதும் செய்ய முயற்சிக்கின்றேன்... இருப்பினும் வேறு ஒருவர் எமது நிலத்தில் உரிமை கொண்டாட எனது பின்னடைவை காரணியாகக் கொள்ள இடமளிக்க முடியாது. பலஸ்தீன் பிரச்சினையின் சாராம்சம் அதுவாகும். 


அப்போது ஐயா! நாம் ஏன் உங்களது பிரச்சினை தொடர்பாக அக்கறை செலுத்த வேண்டும் என்று நீங்கள் வினா எழுப்பினீர்கள். அது நீங்கள் இந்த விடயத்தில் எனக்குக் கடமைப்பட்டுள்ளமையாகும். எனது பிரச்சினையின் தோற்றுவிப்பாளர் நீங்களாவீர். நீங்கள் வசிப்பது இன்னும் பிரித்துத் துண்டாட முடியாதெரு உலகில். எனது துயரம் உங்களது துயரமாகும். முழு உலகமும் நொருங்கி விழும் போது யாரும் பாதுகாவல் பெறமுடியாது. இறைவன் அறிவான். இருப்பினும், மத்திய கிழக்கில் மற்றுமொரு உலகமகா யுத்தம் ஏற்படுமிடத்து உங்களுக்கு சொகுசான ஆசனத்தில் மகிழ்ச்சியான அமர்ந்து  நான் உங்களைப் பற்றி ஏன் விவாதிக்க வேண்டும் என்று கேள்வியெழுப்ப உங்களுக்கு சந்தர்ப்பம் கிட்டாது.” 


நன்றி!

No comments

Powered by Blogger.