அல் - பலாஹ் கல்லூரியின் விழிப்பூட்டல் ஊர்வலம் (படங்கள் இணைப்பு)
(எம்.இஸட். ஷாஜஹான்)
'எம்மை நாமே காத்துக் கொள்வோம்' என்ற தொனிப் பொருளில் இன்று -28- வெள்ளிக்கிழமை டெங்கு நோய் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்பூட்டல் ஊர்வலம் ஒன்று நீர்கொழும்பு அல்- பலாஹ் கல்லூரியினால் நடத்தப்பட்டது.
கல்லூரி அதிபர் ஏ.ஜி.ஹஸனுல் பஸரியின் தலைமையில் இடம் பெற்ற இந்த ஊர்வலத்தில் மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் ,பொது சுகாதாரப் பிரிவினர் ஆகியோர் பங்குபற்றினர்.
ஊர்வலத்தில் பங்கு பற்றியவர்கள் சுலோக அட்டைகளையும் பாதைகளையும் ஏந்தியிருந்ததோடு டெங்கு மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக குரல்களையும் எழுப்பினர்.
அத்துடன் மாணவர்களினால் போதை பொருள் தொடர்பாகவும் டெங்கு தொடர்பாகவும் வீதி நாடகம் நடத்தப்பட்டது.
ஊர்வலம் பாடசாலையில் இருந்து ஆரம்பித்து, பாடசாலையை சுற்றியுள்ள போருதொட்டை கடற்கரை வீதி வழியாக சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இது தொடர்பாக கல்லூரி அதிபர் ஏ.ஜி.ஹஸனுல் பஸரி, மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் சதீஸ்கான் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
Post a Comment