Header Ads



அறம் செய்யவா வழிகள் இல்லை..?👌


தூங்கிக் கொண்டிருப்பவர்களின் தூக்கத்தை கலைக்காதபடி அமைதியாக கதவை மூட வேண்டும், என்ற நல்லுள்ளமும் நம் தராசை வலுவூட்டும் அறச் செயல்தான். 


எங்காவது உணவுத் தட்டு திறந்திருப்பதைக் கண்டால் அதை பாதுகாப்பாக மூடி வைத்துவிடுவதும் நல்லறம்தான். 

தண்ணீர் குழாயை திறக்கும் போது தண்ணீர் வீணாகமல் குறைந்த அளவு திறந்து வைத்து உபயோகிப்பதும் தருமம்தான். 

சலிப்பு தட்டும் வரை ஒருவர் உங்களுடன் பேச்சிக்கொண்டே இருந்தால், அவர் மனம் நோகதபடி கேட்டுக்கொண்டே இருப்பதும் நல்லறம்தான். 

தொலைபேசியில் பதிலளிக்கும் போது கனிவான வார்த்தைகளால் பதிலளிப்பதும் அறச்செயல்தான். 

பாதையில் காணும் குழந்தையைகளிடம் புன்னகைத்து, இரக்கமாக பேசுவதும் நல்லறம்தான். 

நண்பர்கள்,உறவினர்கள், மற்றும் ஊரவந்களை வீட்டுக்கு வரவேற்று உபசரிப்பதும் அறச்செயல்தான். 

நீங்கள் திறந்த ஒன்றை மூடிவிட்டுவது, கைநழுவி விழுந்த பொருளை எட்டுத்து வைப்பது, சிதறி இருந்த ஒன்றை சீர்செய்து விடுவது, பாவித்த இடத்தை சுத்தமாக விட்டுச் செல்லவது இவைகள் எல்லாமே நன்மைகளை உங்கள் தட்டில் குவிக்கும் நற்கருமங்கள்தான். 

அடிக்கடி போன் போட்டு அப்பா அம்மாவிடம் பேசுவது, சகோத சகோதரிகளிடம், சாச்சா சாட்சிகளிடம், மாமா மாமிகளிடம் சுகம் விசாரிப்பதும் நல்லறங்கள்தான். 

ஜூஸைக் குடித்துவிட்டு, பாடிலை அருகிலுள்ள குப்பைத் தொட்டியை தேடிச் சென்று போடுவதும் நன்மைதான். 

படித்த ஒரு அறிவை பதுக்கி வைக்காமல் பரப்புவதும் தருமம்தான். 

தொழில் இல்லாத ஒருவருக்கு தொழில் கிடைக்க உதவி புரிவுதும் அறம்தான். 

கேட்டு வந்த ஒரு யாசகரை வெறும் கையுடன் அனுப்பாமல் தன்னால் முடியுமானாதை கொடுத்து அனுப்புவதும் தரும்மதான். அது பண உதவியாகவும் இருக்கலாம், ஆலோசனைகளாகவும் இருக்கலாம், ஒரு தகவலாகவும் இருக்கலாம். 

ஒருவர் குற்றம் குறைகளைக் கண்டு, அம்பலப்படுத்தாமல் இருப்பதும் நல்லறம்தான். 

மரணித்த ஒருவருக்கு, கண் முன் இல்லாத ஒருவருக்கு பிரார்த்திப்பதும் தருமச்செயல்தான். 

அறச்செயல்களானது எல்லைகளறற் வானம் போல, கரைகளற்ற கடல் போல பரந்து கிடக்கின்றன, நிறைந்து காணப்படுகின்றன. 

நாம் உயிர் வாழ ஏதுவாக இருக்கும் ஆக்ஸிஜன் போலவே நற்கருமங்களும் நம்மை சூழ்ந்துள்ளன. 

நம் எங்ககருந்த போதிலும், நாம் நினைத்தால் தினமும் ஆயிரக்கணக்கான நற்கருமங்களால் நம் தராசுத் தட்டை நிறைத்துக் கொள்ளலாம். 

நற்குருமங்களால் நானிலத்தை நிரப்பிடுவோம்!

நன்மைகளால் நம் தராசுகளை பெறுக்கிடுவோம்!

✍ கலாநிதி அகமத் அப்துல் முன்இம் 

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.