Header Ads



சஹ்ரானையோ ஹிஜாஸையோ காணவில்லை - வழக்கை பார்க்கச்சென்ற அமெரிக்க, ஐரோப்பிய பிரதிநதிகள்

 


- எம்.எப்.அய்னா - 


பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கில், அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான 2 ஆவது சாட்­சி­யாளர், புத்­தளம், அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்­படும் மொஹம்மட் பெளஸான், தான் நீதி­மன்றில் வழங்­கிய சாட்­சியம், நேர­டி­யாக தன் கண்­களால் காணா­த­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்­டது என ஒப்­புக்­கொண்டார்.


கடந்த வாரம் (14), புத்­தளம் மேல் நீதி­மன்றில் நடந்த வழக்கு விசா­ர­ணை­களின் இடையே, இந்த விடயம் பிர­தி­வாதி தரப்பின் சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ர­ளவின் குறுக்கு விசா­ர­ணையின் போது மன்றில் வெளிப்­ப‌­டுத்­தப்­பட்­டது.


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு கடந்த 14 ஆம் திகதி நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் புத்­தளம் மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது.


இதன்­போது , பிணையில் இருக்கும் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் 2 ஆம் பிர­தி­வா­தி­யான அல் சுஹை­ரியா மத்­ரசா பாட­சாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.


முதல் பிர­தி­வா­தி­யான சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பர்மான் காசிம், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன, சட்­டத்­த­ரணி ஹபீல் பாரிஸ் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

2 ஆம் பிர­தி­வா­தி­யான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான ஹபீல் பாரிஸ் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.


இவ்­வ­ழக்­கினை இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விஷே­ட­மாக மேற்­பார்வை செய்யும் நிலையில் அதற்­காக பிரத்­தி­யேக சட்­டத்­த­ர­ணிகள் குழாம் ஆஜ­ரா­னது.


வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­க­மவும் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன சில்­வாவும் ஆஜ­ரா­கினர்.


அத்­துடன் இவ்­வ­ழக்கு விசா­ர­ணை­களை கண்­கா­ணிக்க ஐரோப்­பிய ஒன்­றிய அதி­கா­ரிகள், அம­ரிக்க தூத­ரக அதி­கா­ரிகள் நீதி­மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தமை விஷேட அம்­ச­மாகும்.


கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திக­திக்கும் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு, கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட சொற்கள் ஊடா­கவோ, தவ­றான பிரதி நிதித்­துவம் ஊடா­கவோ பல்­வேறு மதங்­க­ளுக்கு இடையில் மோதல் ஏற்­படும் வண்ணம் எதிர் உணர்­வு­களை தூண்டும் வித­மாக சொற் பொழி­வினை நடாத்­தி­யமை, அதற்­காக சதி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து கூறப்­படும் அச்­சட்­டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்­டனைக் குரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.


அத்­துடன் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்­ரே­லி­யர்கள் கைப்­பற்­றி­யி­ருப்­பது, எமது பள்­ளி­வா­சல்கள். இலங்­கையில் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தி­னா­லேயே அவர்கள் அச்­சப்­ப­டுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடி­யோக்­களை காண்­பித்­தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலை­மையை ஏற்­ப­டுத்தும் வண்ணம் உணர்­வு­களை தூண்­டி­ய­தாக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து நோக்­கப்­படும் அச்­சட்­டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்­டனைக் குரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.


குறித்த இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்­க­ர­வாத தடை சட்ட ஏற்­பா­டுகள் பிர­காரம் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.


இத­னை­விட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்­பி­லான யுத்த வீடியோ காட்­சி­களை காண்­பித்து ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கூறி­ய­தாக கூறப்­படும் வச­னங்கள் ஊடாக வெறுப்­பு­ணர்­வு­களை விதைத்த­தாக குற்றம் சுமத்தி சிவில் அர­சியல் உரி­மைகள் குறித்­தான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 (1) ஆம் உறுப்­பு­ரை­யுடன் இணைத்து பார்க்­கப்­படும் அச்­சட்­டத்தின் 3 (3) ஆம் உறுப்­பு­ரையின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரா­கவும், அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீ­லுக்கு எதி­ரா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.


இந் நிலையில் கடந்த மார்ச் 24, 27 ஆம் திக­தி­களில் நடந்த விசா­ர­ணை­களின் போது 2 ஆம் சாட்­சி­யா­ள­ராக அல் சுஹை­ரியா மத்­ர­ஸாவின் முன்னாள் மாண­வ­னான, 19 வய­து­டைய மொஹம்மட் பெளஸான் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.


அவ­ரது சாட்­சி­யத்தை அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­கம நெறிப்­ப­டுத்­தி­யி­ருந்த‌ நிலையில் முதல் பிர­தி­வாதி சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளின் இந்­ர­திஸ்­ஸ­வினால் குறுக்கு விசா­ர­ணையும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.


இவ்­வா­றான நிலை­யி­லேயே கடந்த 14 ஆம் திகதி வெள்­ளி­யன்று 2 ஆவது பிர­தி­வாதி சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள குறுக்கு விசா­ர­ணை­களை ஆரம்­பித்தார்.


சாட்­சி­யாளர் கடந்த மார்ச் 24 ஆம் திகதி வழங்­கிய சாட்­சி­யத்தின் போது இத­னை­விட, தான் மத்­ர­ஸாவில் இருந்த காலப்­ப­கு­தியில், அங்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலின் பிர­தான குண்­டு­தா­ரி­யாக கரு­தப்­படும் மொஹம்மட் சஹ்ரான் மற்றும் ரிழ்வான் அல்­லது ரிஸ்வான் எனும் பெயரில் அறி­யப்­படும் ஒரு­வரும் வந்­த­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.


சஹ்ரான், ரில்வான் அல்­லது ரிஸ்வான் ஆகியோர், முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் மீது கிறிஸ்­த­வர்கள் தாக்­குதல் நடாத்­து­வ­தா­கவும் அதற்கு பதி­ல­டி­யாக குண்டுத் தாக்­குதல் நடாத்த வேண்டும் எனக் கூறி­ய­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்­டி­ருந்தார். அதனால் அச்­ச­ம­டைந்து தான் மத்­ர­ஸாவில் இருந்து யாருக்கும் தெரி­யாமல் பல­முறை வீட்­டுக்கு ‘பாய்ந்து’ சென்­ற­தாக சாட்­சி­யாளர் கூறி­யி­ருந்தார்.


எனினும் 2 ஆம் பிர­தி­வாதி சார்­பி­லான குறுக்கு விசா­ர­ணை­களின் போது அந்த விட­யங்கள் பொய்­யா­னது என்­பதை ஒப்­பு­விக்கும் வித­மாக சாட்­சி­யா­ளரின் பதில்கள் அமைந்­தி­ருந்­தன. குறிப்­பாக சஹ்ரான் மத்­ர­ஸா­வுக்கு வந்­த­தாக அளித்த சாட்­சியம், தனது கண்­களால் கண்ட விட­ய­மல்ல எனவும், முதல் சாட்­சி­யாளர் மலிக் தன்­னிடம் தெரி­வித்த விட­யங்­க­ளுக்கு அமைய அளிக்­கப்­பட்ட சாட்­சியம் எனவும் சாட்­சி­யாளர் பெளசான் நீதி­மன்றில் குறிப்­பிட்டார்.- Vidivelli

No comments

Powered by Blogger.