விசேட அதிரடிப்படையினரால் அதிகாலையில் ஒருவர் சுட்டுக் கொலை
மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று -20- அதிகாலை மினுவாங்கொடையில் இந்த துப்பாக்கிச்கூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹோமாகமவில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment