பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு
அநுராதபுரத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (17.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது. கெக்கிராவை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய எஸ்.ஆர்.சுசந்திகா என்ற மாணவியே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், மாணவியின் பெற்றோரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment