சுவீடனில் மீண்டும் குர்ஆனை இழிவுபடுத்தும் செயல் (வீடியோ)
இன்று வியாழக்கிழமை (20) ஆம் திகதி ஸ்வீடனில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் குர்ஆனை இழிவுபடுத்தும் செயல் வேண்டுமென்றே நடந்துள்ளது.
ஸ்டாக்ஹோமில் உள்ள ஈராக் தூதரகத்தின் முன் நின்று கொண்டு, ஈராக் வம்சாவளியைச் சேர்ந்த சல்வான் மோமிகா குரான் மற்றும் ஈராக் கொடி இரண்டையும் தரையில் வீசி மிதித்துஇ அதன் மீது கால்களை வைத்துள்ளான்.
கடந்த மாதம் மோமிகா குர்ஆனை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பாக்தாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டதை அடுத்து இது நடந்தது.
குர்ஆனை இழிவுபடுத்தும் செயலுக்கு எதிராக அங்கு மேலும் சில முஸ்லிம்கள் வந்து தமது பலத்தை எதிர்ப்பை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்களின் எதிர்ப்பை பகிரங்கமாகத் தெரிவித்துவிட்டு அவர்களின் வேலையைப் பார்க்க வேண்டியதுதான். அல்குர்ஆனை இறக்கி உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு இந்த உலகிலும் மறுமையிலும் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரே நோக்கோடு அதனை இறக்கி வைத்த இறைவன் மக்களுக்கு ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளான். அலஹிஜ்ர் என்ற ஸுராவின் 9வது வசனத்தில் அல்லாஹ் கூறுவதுபோல 'நிச்சியமாக நாமே அதனை இறக்கி வைத்தோம். நிச்சியமாக நாம் அதனைப் பாதுகாப்போம்' என வாக்குறுதியளித்திருக்கின்றான். எனவே மனிதர்கள் அதை தீயிட்டுக் கொளுத்துவதன் மூலம் அல்லது அதை அவமதிப்பதன் மூலம் அவர்கள் முஸ்லிம்களை மாத்திரம் அவமதிக்கவிலலை. அதன் உரிமையாளனாகிய அல்லாஹ்வை அவர்கள் அவமதித்து கேவலப்படுத்த தீர்மானித்தால் அதற்குரிய தண்டனையை அல்லாஹ் எவ்விதக் குறைவுகளுமின்றி வழங்குவான். எனவே, அதற்காக ஆர்ப்பாட்டங்கள், வேறு அழிவுகளை மேற்கொள்ள முயற்சி செய்யமால் அவர்களால் இயன்றவளவு அதனைப்படித்து, விளங்கி அதனைச் செயல்படுத்த முயற்சி செய்தால் அதற்கு சரியான கூலியை வழங்க அல்லாஹ் போதுமானவன்.
ReplyDelete