Header Ads



இப்போதே தயாராகுங்கள் மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவர

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி


ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென நாம் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம்.


நீங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் ஆயின், இப்போதே தயாராகுங்கள். 2024ஆம் ஆண்டில் நாம் மீண்டும் மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவோம்.


நாங்கள் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள். எங்களுக்கு வேறு கட்சிகள் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் இந்தவேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


காட்டாட்சியை நாட்டிலிருந்து இல்லாது செய்தமைக்காக. ஆனால், அதேநேரம் 2024 ஆம் ஆண்டுவரை தான், நாம் அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.


2024 இலிருந்து 2029 வரை நாம் அவரை ஜனாதிபதியாக்கப் போவதில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டும், பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம்.


ஏனைய தரப்பினருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி, தோல்வியடைய வேண்டாம் என்றும் நாம் ஜனாதிபதிக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. இது தான் பேராசை பிடித்த அரசியலுக்கு கண்ணும் காதும் உள்ளமும் இல்லை என்பதற்குச் சிறந்த உதாரணம். 2024 ஆண்டுக்குப்பிறகு மஹிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவரத் தயாராகட்டுமாம். அந்த நபர் தற்போது எம்பாம் பண்ணப்பட்டு குழியில் வைக்கும் பிணமாகத் தோன்றும் போது அந்தப்பிணம் 2024 ஆண்டு எப்படியிருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள் இந்த போக்கிரிகளின் அரசியல் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை. எமது நாட்டு இளம் சமுதாயத்தினரின் எதிர்காலம் என்பது ஒவ்வொரு நாளும் இருளிலேயே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனைப் பார்ப்பதற்கு இந்த நாட்டில் சிறிதளவாவது மூளையுள்ள மனிதர்கள் இல்லையா என பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.