Header Ads



தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர் திடீரென உயிரிழப்பு


வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.


காய்ச்சல் காரணமாக அவர் விடுதியில் தங்கியிருந்த நிலையில், வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் நேற்று(17.07.2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மட்டக்களப்பு - காரைத்தீவு பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


மேலும் அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் சடலம் மீதான பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பபடுகிறது.

No comments

Powered by Blogger.