இஷாம் மரிக்கார் மீது தாக்குதல், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாதது ஏன்..?
இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவிருந்த வேட்பாளரும், க்லீன் நேஷன் அமைப்பின் தலைவரும்,சமூக செயற்பாட்டாளருமான இஷாம் மரிக்கார் தாக்கபட்டமையைக் கண்டித்து புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக இன்று ஜும்ஆத் தொழுகையினை தொடர்ந்து ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் மாவட்ட இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இஷாம் மரிக்கார் தாக்கப்பட்டு 9 நாட்கள் கடந்தும் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் குறித்த தாக்குதலுக்கு மூலதனமாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அண்மையில் இடம்பெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில் புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தமையினால் இஷாம் மரிக்கார் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment