மஹிந்தவுக்கு என்ன நடந்தது..?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் அரங்கில் இல்லாதது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த வாரம் பல முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், அந்த நிகழ்வுகள் எதிலும் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவில்லை.
இதனையடுத்து அவருக்கு என்ன நடந்தது என உறுப்பினர்கள் பலர் பலரிடம் கேட்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும், மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக வெளியில் வராத போதிலும், விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் பல்வேறு அரசியல் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மஹிந்த இந்த நாட்டுக்குச் செய்த அநியாயங்கள், அட்டூழியங்கள்,பாரிய களவுகள், பலாத்கார இலஞ்சம், பயங்கர கமிசன்கள் மட்டுமன்றி பொதுமக்களின் சாதாரண வாழ்க்கையைப் பாதிக்கும்வகையில் செய்த அத்தனை அட்டகாரசங்களுக்கும் சரியான வெகுமதிகளை இவ்வுலகிலும் மறுமையிலும் சரியாக வெகுமதி வழங்கும் அவனையும் அனைவரையும் படைத்த இரட்சகன் கொடுக்காத வரை அவர் இந்த உலகிலிருந்து பிரிவதில்லை. அரசாங்கத்தை நடாத்தவும் பொதுமக்களின் வாழ்க்ைக வளப்படுத்தும் நோக்கில் போலியாக மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் படுதோல்வி. அவற்றுககு முக்கிய காரணம், எல்லா பணிகளின் பின்னால் இருப்பது அந்த வேலை செய்தால் எனக்கு எவ்வளவு கிடைக்கும், வௌிநாட்டு வங்கிக் கணக்கில் எவ்வளவு வைப்புச் செய்வாய் போன்ற மிகவும் கீழ்த்தரமான இழிவான இலஞ்சம், கொள்ளைகள் காரணமாக எந்த ஒரு முன்னேற்றமும் அரச மட்டத்தில் நடைபெறவில்லை. அவனிடமிருந்த ஒரே கைங்கரியம் அழகாக பேசி படுபொய்களை உளத்தி பொதுமக்களை ஏமாற்றுவது. இத்தகைய கெட்டவனுக்கு தொடர்நதும் பொதுமக்களை எதிர்நோக்க முடியாது என்பது தான் யதார்த்தம். அதுதவிர அவன் ஒரு புற்றுநோயாளி என பல சார்பினரும் கூறினர். அவற்றை மறுப்பது தவிர அவன் செய்தது ஒன்றுமில்லை. எனவே இரட்சகனின் முடிவு நிச்சியம் மிகச் சரியாக நடைபெறும். பொருத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete