Header Ads



குர்ஆன் எரிப்புக்கு எதிர்ப்பு வெளியிட்ட, இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரிப்போம்


சுவீடனில் ஹஜ்பெருநாளன்று அல்குர்ஆன் பிரதியை எரியூட்டிமையை கண்டித்து சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இலங்கை தனது நிலைப்பாட்டை வெளியிட்டமை முஸ்லிம் தலைமைகளால் வரவேற்கப் பட வேண்டும்!


கருத்து வெளியிடும் உரிமை சுதந்திரம் என்ற பெயரில் மத நிந்தனைகள் இடம் பெறுவதை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் மெளனமாக பார்த்திருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி நேற்று வெளியிட்ட அதே வேளை நட்பு நாடான பாகிஸ்தான் முன்வைத்துள்ள பிரேரணையை இலங்கை வரவேற்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது!


பாகிஸ்தான் மாத்திரமல்லாது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு OIC இதற்கான விஷேட கண்டன அமர்வை மனித உரிமை ஆணையகத்திடம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது!


மனித உரிமைகள் அமைப்பில் தற்போது வாக்களிக்கும் உறுப்புரிமை பெற்றுள்ள 47 நாடுகளில் இலங்கை இல்லாத போதும் அதன் அதிருப்தியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்!


அரபு முஸ்லிம் நாடுகளது ஒத்துழைப்பு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு தேவைப்படுவதும், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இருதரப்பு பலதரப்பு உறவுகளை கட்டியெழுப்ப வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ள நிலையில்  ஜனாதிபதி மேற்கொண்டுள்ள  இராஜதந்திர நகர்வாக மட்டும் இந்த நிலைப்பாட்டை பார்க்க வேண்டியதில்லை!


அரசியல் நிலைப்பாடுகள் வேறுபாடுகளுக்கு அப்பால் முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் அரசின் நிலைப்பாட்டை வரவேற்க வேண்டும் !


மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

13.07.2023

No comments

Powered by Blogger.