பெற்ற குழந்தையை பணயக் கைதியாக்கிய தந்தை - மதுரங்குளியில் அதிர்ச்சி
பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிசார் மிகுந்த பிரயத்தனத்துடன் அவரைக் கைதுசெய்ததுடன் சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் அவரது குழந்தையைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (18) மதுரங்குளி, ஜின்னவத்த கிராமத்தில் பெண் ஒருவரை ஆண் ஒருவர் தாக்குவதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக மதுரங்குளி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்ற போது, குறித்த நபர் கத்தியை வைத்திருந்த நிலையில், குறித்த நபர் அதிகாரிகளை கத்தியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தேக நபரை பெரும் முயற்சியுடன் கைதுசெய்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரின் தந்தை மற்றும் இரண்டு அத்தைகள் வந்து அவரை பொலிஸ் காவலில் இருந்து விடுவித்து அவரது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பணிப்புரையின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை கைது செய்வதற்காக பிரதேசத்திற்கு சென்றுள்ளது.
தான் கைது செய்யப்பட்டால் கையில் உள்ள மன்னா கத்தியால் குழந்தையை தாக்குவேன் என தனது மூன்று வயது குழந்தையை பிணைக் கைதியாக வைத்திருந்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, அங்கிருந்த ஒருவர் இதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில் அது சமூக ஊடகங்களில் வௌியானது.
சந்தேக நபரை கட்டுப்படுத்த சென்ற நபரையும் மன்னா கத்தியால் அவர் தாக்க முயன்றுள்ளார்.
அதிலிருந்து தப்பிய நபர், சந்தேக நபரை பிடித்துள்ளார்.
இதன்போது வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குழந்தை தற்போது புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.
பின்னர், சந்தேக நபரையும் கைது செய்யச் சென்ற பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment