விரட்டப்பட்டு இன்றுடன் ஒரு வருடம்
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவரை லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் ஊடாக விரட்டியடித்த சம்பவம் நடந்தேறி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் மாபெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தது. எரிபொருள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டன. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர்.
இதன் விளைவாக, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸவை லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி விரட்டியிருந்தனர்.
இவனை விரட்டியடித்த, அதற்கு ஆதரவாக இருந்த அத்தனை மக்களும் இவன் நாசமாப் போகட்டும் என திட்டித்த தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் மற்றவர்களைக் கேட்கின்றனர். இவன் செய்த அட்டகாசம்,அழிவு, கொள்ளை, களவு காரணமாக முற்றாக வாழ்க்கை நாசமாகிய ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்க்கைக்கு வழிதெரியாமல் தடுமாறும் போது சிறையில்தள்ளப்பட வேண்டிய இந்தக் கேடி பொதுமக்களின் பணத்தில் சொகுசாக உல்லாசமாகவும் உண்டு உடுத்து உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றான். இதற்குக் காரணம் யார்?
ReplyDelete