சாப்பிட்டு விட்டு பணம் தராவிட்டால்..? கொரூரமான ஐடியாவை கூறும் சிற்றுண்டிசாலை சங்கம்
உணவு உண்டு விட்டு கட்டணத்தை செலுத்த மறுப்பவர்களை சோறு தாளிக்கும் பாத்திரத்தைக் கொண்டு தாக்குங்கள் அல்லது கொதிநீர் மற்றும் கழிவு நீரால் ஊற்றுங்கள்,
என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தமது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.
பழம்பெரும் பாடகர் சமன் டி சில்வா உணவகம் ஒன்றின் ஊழியர்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டிக்கும் போதே அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் இவ்வாறு தெரிவித்தார்.
அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் என்பவன், உணவு உண்டு விட்டு கட்டணத்தை செலுத்த மறுப்பவர்களை சோறு தாளிக்கும் பாத்திரத்தைக் கொண்டு தாக்குங்கள் அல்லது கொதிநீர் மற்றும் கழிவு நீரால் ஊற்றுங்கள், என உணவுச்சாலை உரிமையாளர்களுக்கு அறிவித்தால் இந்த அறிவிப்பைச் சரியாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, இவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அல்லது இந்த நாட்டில் சாப்பாட்டு கடைகள், சிற்றுண்டிச்சாலைகளில் உணவருந்துபவர்கள் ஒரு வாரத்துக்கு எந்த கடைகளிலும் உணவருந்தாமல் பகிஷ்கரித்தால் அவனுடைய ஆட்கள் அவனுக்கு உரிய வெகுமதியை வழங்குவார்கள். அந்த தண்டனையை கொடுக்கும் உரிமை பொதுமக்களைச் சார்ந்தது. அதனை அவர்கள் செய்வார்களா?
ReplyDelete