அல்குர்ஆனில் ஒரு, எழுத்தேனும் மாற்றப்படவில்லையா..?
- மொஹமட் அன்ஸிர் -
தீவிரவாத நிபுணரும், பேராசிரியருமான ரொஹான் குணரத்தினா Srilanka's Easter Sunday Massacre - Lessons for the International Community என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார்.
இங்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 18 நிமிடங்கள் உரையாற்றியிருந்தார்.
அல் குர்அனில் உள்ள ஆயத்துக்கள், அதில் உள்ள சிறப்பு அம்சங்கள், குர்ஆன் இறக்கப்பட்டது முதல் இதுகாலவரையும் அதில் எந்தவொரு வார்த்தையும் இதுவரை மாற்றப்படாமை பற்றியும் அலி சப்ரி சுட்டிக்காட்டியிருந்தார்.
அலி சப்ரி தனது பேச்சை முடித்துக் கொண்டு, மேடையில் வந்து அமர்ந்ததும், அவர் அருகில் இருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா, உங்கள் குர்ஆனில் இதுகாலவரையும் ஒரு எழுத்தேனும் மாற்றப்படவில்லையா என மிகவும் ஆச்சரியத்துடன் வினவியுள்ளார்.
இல்லை, புனித அல்குர்அனில் ஒரு எழுத்தேனும் மாற்றப்படவில்லை என அலிசப்ரி இதன்போது சபாநாயகருக்கு எடுத்துக் கூறியுள்ளார். ஒ... அப்படியா என வினவி வாயடைத்து நின்றுள்ளார் இதன்போது சபாநாயகர்.
அல்லாஹ்வினால் அருளப்பட்டு, அவனது இறுதித் தூதர் முஹம்மது நபிகளாரினால் உலகத்திற்கு கற்றுக்கொடுக்கப்பட்ட புனித அல்குர்ஆன் குறித்து நாட்டின் உயர் பதவியில் உள்ள ஒருவரால் கூட, இதுவரை அறிந்துகொள்ள முடியவில்லை அல்லது முஸ்லிம்களினால் குர்அன் பற்றி அறியப்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில் மதவெறியர்கள் புனித குர்அன் குறித்த அப்பாவி மக்களிடையே போலிப் பிரச்சாரஙகளை மேற்கொள்வது இலகுவாகிவிடும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
நாட்டில் அதிஉயர் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ஒரு அதிகாரி இந்த நாட்டில வாழும் அத்தனை மத இனங்கள் பற்றியும் அவர்களின் கலாசாரம் பற்றியும் ஆழ்ந்த அறிவில்லாவிட்டாலும் அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும். வெறுமனே வாயைத் திறந்தால் பொய்யும், பொய் வாக்குறுதியும், இனத்துவேசத்துக்கு மறைமுக ஆதரவும் வழங்கும் இந்த நபர்கள் உயர் இடங்களில் பதவி வகிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டுக்கு அழிவும் இழிவும் மாத்திரம் எஞ்சியிருக்கும்.
ReplyDelete