கொழும்பின் கடற்கரைகளுக்கு செல்வோரின் கவனத்திற்கு
கொழும்பு - கல்கிஸ்ஸ கடற் கரையோரத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லிமீன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கடற்கரைக்கு செல்லும் மக்கள், கடல் அலைகளை மிதிக்காமலும் கடல்நீரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் கடற்றொழிலாளர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெல்லி மீன்கள், மனித உடலில் பட்டால் கடுமையான அரிப்பு ஏற்படும். அத்துடன் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கடற்கரைகளில் குவித்து கிடக்கும் பொருட்களை மிதிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் வாழும் இந்த ஜெல்லி மீன்கள் தற்போது ஏற்பட்டுள்ள பருவமழையை அடுத்த கடல் அலைகளுடன் கரையை நோக்கி இழுத்து செல்லப்படுகின்றன.
இவ்வாறு கரைக்கு வரும் ஜெல்லி மீன்கள் கடற்கரையிலுள்ள மணலில் புதைந்துள்ளமையால் அங்கு செல்லும் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment