Header Ads



டொலருக்கு அடிமையானவர்கள் ராஜபக்சக்களுக்கு எதிராக பிரசாரம், ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்


ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக்கொண்டு கடந்த ஆண்டு பயங்கரவாத செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 


பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,


ராஜபக்சக்கள் நாட்டுக்கு சேவையாற்றினார்களே தவிர நாட்டுக்கு தீ வைக்கவில்லை. பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கத்தில் அமைச்சரவையில் இருந்தவர்கள் பொருளாதாரப் பாதிப்பை அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள். ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக்கொண்டு கடந்த ஆண்டு பயங்கரவாத செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன.


டொலருக்கு அடிமையானவர்கள் ராஜபக்சக்களுக்கு  எதிராக திட்டமிட்ட வகையில் பிரசாரங்களை முன்னெடுக்கிறார்கள். ராஜபக்சர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பெரும்பாலான மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே போலியான பிரசாரங்களுக்கு மக்கள் இனி ஏமாற்றமடைய மாட்டார்கள்.


கட்சி என்ற ரீதியில் மறுசீரமைப்புடன் பலமடைந்துள்ளோம். இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவவே ஆட்சியமைக்கும்.


பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். எக்காரணிகளுக்காகவும் எமது கட்சி கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என குறிப்பிட்டார்.  Tamilw

No comments

Powered by Blogger.