Header Ads



ஜனாதிபதி மாளிகையில் இருந்து, இன்று மஹிந்தானந்த தெரிவித்தவை


உலக நாடுகள் பலவும் போராட்டங்களின் காரணமாக முடங்கிப் போயுள்ள நிலையில், ஒரு வருடத்திற்குள் அந்த சவால்களை வெற்றிக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்தினால் முடிந்துள்ளெதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சொந்த வீட்டிற்கு தீ மூட்டியிருந்தமை, பொதுச் சொத்துக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட தினமாக மே 09 ஆம் திகதி வரலாற்றில் இடம்பிடித்துள்ளதெனவும், போராட்டங்களின் பின்னால் காணப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது எனவும் கூறினார். 


‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே,


பணவீக்கம், வங்கி வட்டி, மின் கட்டண குறைப்பு, வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் வருகை, ஏற்றுமதி, பங்குச் சந்தை, வெளிநாட்டு கையிருப்பு வீதம் என்பவற்றில் முன்னேற்றத்தை அவதானிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


"அதேபோல், அதற்கான போராட்டங்களின் முக்கியமான சில நோக்கங்களையும் அவதானிக்க முடிந்தது. அதற்காக இந்நாட்டு மக்கள் ஒன்று திரண்டனர். 13 மணித்தியால மின்வெட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு மக்கள் முகம்கொடுத்தனர். இருப்பினும் அரச சொத்துக்களையும் அழிப்பத்தற்கும்,வீடுகளை தீ வைப்பதற்கும், கொலைகளைச் செய்யவும் மக்களுக்கு அவசியம் இருக்கவில்லை. 


மாறாக போராட்டங்களில் பங்கேற்ற மக்களுக்கு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கம் இருக்கவில்லை.  அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் மேற்படி போரட்டங்களின் பின்னணியில்  நின்றன. அந்த போராட்டங்கள் நிறைவுற்ற ஒரு வருட காலத்தில் நாட்டில் என்ன நடந்தது என்பது தொடர்பில் மக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளது. 


அதேபோல் போராட்டங்களில் பங்கெடுத்திருந்த பலருக்கு வெளிநாடுகளிலிருந்து பெருமளவான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீதிமன்ற நடவடிக்கைளின் போது தெரியவந்துள்ளது. அவற்றின் அதிகபடியான பணம் பெருமளவில் வியாபாரம் இடம்பெறும் கோதமாலாவிலிருந்தே அனுப்பட்டிருந்தது. ஜனாதிபதி கோட்டாய காலத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கான பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  

 

அதனாலேயே, கோதமாலாவிலிருந்து பணம் அனுப்பட்டிருந்தது. மறுமுனையில் முன்னிலை சோசலிஸ கட்சியின் உறுப்பினர் கல்கமுவ சிறிதம்ம தேரர்கள், அவர்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து பணம் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீமூட்டியவர்களுக்கு தலைமைத்துவம் வழங்கிய சஹஜ மதுசங்க என்பவரின் வங்கி கணக்குக்கும் வெளிநாடுகளிலிருந்து பணம் வந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. 


அதனால் போராட்டங்களுக்கு தலைமைத்துவம் வழங்கிய பலருக்கு பணம் கிடைத்த விதம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தகவல் தெரிவிப்போம். கடந்த வருடத்தில் இதேநேரத்தில் ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்திக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்குள் காணப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.  


தற்போதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது சொந்த வீட்டை கொழும்பு ரோயல் கல்லூரிக்கு தியாகம் செய்துள்ளார். அத்தகைய வீடும் ஜனாதிபதியின் அன்புக்கு பாத்திரமான நூலகமும் தீமுட்டப்பட்டதும் இதுபோன்தொரு நாளிலாகும். அது போன்றதொரு நூலகத்தை முழு ஆசியாவிலும் தேட முடியாது.   அதேபோல் தெற்கில் அமைச்சர் ரமேஷ் பத்திரன போன்ற அகிம்சாவாதிகளின் வீடுகளுக்கும் தீ மூட்டப்பட்டது. 


அவ்வாறு 48 வீடுகளுக்கு தீ மூட்டப்பட்டதோடு, பெருமளவான பஸ்களும் எரிக்கப்பட்டன. இவ்வாறான அராஜகமான நிலைமைகளுக்கு முகம்கொடுத்திருந்த மத்திய கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க நாடுகள் இன்றும் மீள முடியாமல் தவிக்கின்றன. 


ஆனால் அவ்வாறானதொரு சூழலில் எவரும் சவாலை ஏற்றுக்கொள்ள முன்வராத போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் நாம் வங்குரோத்து அடைந்த நாடு.  தொடர் மின்தடை, எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுப் போனது, படுகடனை திருப்பிச் செலுத்த இயலுமை இல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தலையெடுத்திருந்தன.

 

அதேபோல் பணவீக்கம் 67% சதவீமாக காணப்பட்டது, வெளிநாட்டு கையிருப்புக்கள் எஞ்சியிருக்கவில்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் வருகை தடைப்பட்டது. வங்கி வட்டிவீதம் 30% சதவீதமாக உயர்வடைந்திருந்தது.  இவ்வாறான சவாலான சூழலிலேயே தற்போதைய ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டார். 

எவ்வாறாயினும், மேற்குறிப்பிட்டவாறு அராஜக நிலைக்கு தள்ளப்பட்ட நாடுகள் எவற்றினாலும் முடியாதவாறு இந்நாட்டின் நிலைமையை ஒரு வருடத்திற்குள் சுமூகமாக மாற்றியமைக்க தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்தது. 


எவ்வாறாயினும் 67%  சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் 7% சதவீதம் வரையில் குறைவடைந்திருக்கிறது.  30 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்ட வங்கி வட்டி வீதத்தை 12% - 13% சதவீதமாக குறைக்க மத்திய வங்கியினால் முடிந்துள்ளது. அதேபோல் மின்சார கட்டணம் 55% சதவீதத்தினாலும், சமையல் எரிவாயு விலை 40% சதவீத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. 4 வருடங்களின் பின்னர் கடந்த மாதத்தில் மாத்திரம் 1 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். 

அதனால் இன்று போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவற்றில் பங்கேற்ற மக்கள் விரும்புவதில்லை. போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் இன்றும் நீதிமன்றங்களின் முன்னால் நிற்கிறார்கள். 


அதனால் நாட்டு மக்களுக்கும் முதலீடுகளை மேற்கொள்ள வரும் வர்த்தகர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மறுமுனையில் கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்.  ஆனால் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை நாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை. 

அதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி சரியான பாதைக்கு இந்நாட்டை இட்டுச் சென்றுள்ளார். அதனால் மேற்படி வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும்"  என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.    


ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

09-07-2023  

No comments

Powered by Blogger.